"நான் மனசு வச்சிருந்தா விக்கியும் நயனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கூட இருக்க மாட்டாங்க"- மிர்ச்சி சிவா
நான் மனது வைத்திருந்தால் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திருக்கவே மாட்டார்கள் எனக் கூறி நடிகர் மிர்ச்சி சிவா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் உ்ள்ளிட்டோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார்.
இப்படத்திற்கு எட்வின் லூயிஸ், விஸ்வநாத் ஹரி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். சி.வி.குமார் படத்தை தயாரித்துள்ளார்.
சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும்
இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகமான சூது கவ்வும் நாடும் நாட்டு மக்களும் திரைப்படம், தற்போது டிசம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிர்ச்சி சிவா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து கல்யாணம் செய்து குழந்தை குட்டியுடன் வாழ்வதற்கு நான் தான் காரணம் எனக் கூறி அனைவரையும் திகைக்க வைத்தார்.
நானும் ரவுடி தான்
பின், இதுகுறித்து அவர் விளக்கமும் அளித்துள்ளார். அதில், இயக்குநர் விக்னேஷ் சிவன், 2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகனாக நடிக்குமாறு என்னிடம் கேட்டு, படத்தின் மொத்த கதையையும் என்னிடம் கூறினார்.
இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நான் நடித்தால் சரியாக இருக்காது என நினைத்து நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
நயன்தாரா சம்மதிக்க மாட்டார்
மேலும், ஒருவேளை இந்தப் படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தால், நிச்சயம் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்க மாட்டார்கள்.
இதனால், விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து படம் எடுத்திருக்கவும் முடியாது, ஏன் படத்தின் கதையை சொல்லக் கூட அவரை பார்த்திருக்க முடியாது.
நான் தான் காரணம்
அதனால், இவர்கள் இருவரும் தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு ஒருவகையில் நானும் காரணம் எனக் கூறினார்.
ஏற்கனவே, நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்த பிரச்சனையும், நானும் ரவுடி தான் படத்தின் பிரச்சனையும் முடியாமல் உள்ள நிலையில், தற்போது மெர்ச்சி சிவாவும் படத்தின் புரொமோஷனுக்காக இவர்கள் குறித்து பேசியுள்ளார்.
சூது கவ்வும் 2 எதற்கு?
முன்னதாக சூது கவ்வும் படம் குறித்து பேசிய மிர்ச்சி சிவா, சூது கவ்வும் படம் நல்ல படம். அதை ஏன் 2ம் பாகம் எடுக்கிறீர்கள் எனக் கேட்டதாகவும் கூறினார்.
பின்னர், இது சூது கவ்வும் படத்தின் ப்ரீகுவலாக இருக்கும் எனக் கூறி பல சுவாரசியமான காட்சிகளை என்னிடம் கூறினர். தயாரிப்பாளர் சி.வி.குமார் சினிமாவை மிகவும் நேசிக்கிறார். அவரை நான் நேசிப்பதால் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்