Actor Soori: ‘நான் உண்மையில் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.. இதுதான் என் பெரிய பலம்..’
Actor Soori: இயக்குநர் வெற்றிமாறனுக்கு நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என நடிகர் சூரி கூறியுள்ளார்.

Actor Soori: தமிழ் சினிமாவில், சின்னச் சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து பின் காமெடியனாக மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் சூரி. இவர் காமெடியில் தனக்கென தனி பாணியை கண்டுபிடித்ததன் மூலம் மக்கள் விரும்பும் காமெடியனாகவும் இயக்குநர் விரும்பும் நடிகராகவும் மாறினார். இதையடுத்து அவர் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச காமெடி நடிகரானார்.
தன்னடக்கம்
இவர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தான் இயக்குநர் வெற்றிமாறன், அவரை தன் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக கூறி மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இப்படி ஒரு வாய்ப்பை சூரியும் எதிர்பார்த்தது இல்லை. மக்களும் எதிர்பார்க்கவில்லை. இதை பலரும் விமர்சிக்க செய்த நிலையில், தன்னை கதாநாயகன் என சொல்லாமல் கதையின் நாயகன் என சொல்லி தன்னடக்கம் கொண்டார் சூரி.
உடலை வருத்தி மெருகேறிய சூரி
இதையடுத்து, வெற்றிமாறன் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து, தன்னை உடலளவிலும் மெருகேற்றிக் கொண்டார்.