Cynthiya Lourde: 'என்ன பாத்தா டிரான்ஸ்ஜென்டர் மாதிரி இருக்கா.. எல்லாம் பொறாமை தான்..' சிந்தியா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cynthiya Lourde: 'என்ன பாத்தா டிரான்ஸ்ஜென்டர் மாதிரி இருக்கா.. எல்லாம் பொறாமை தான்..' சிந்தியா

Cynthiya Lourde: 'என்ன பாத்தா டிரான்ஸ்ஜென்டர் மாதிரி இருக்கா.. எல்லாம் பொறாமை தான்..' சிந்தியா

Malavica Natarajan HT Tamil
Jan 16, 2025 07:00 AM IST

Cynthiya Lourde: கோடிக்கணக்கில் பணம் முதலீடு பண்ணி இங்க ட்ரோலுக்கு உள்ளாகனும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா என தயாரிப்பாளரும் நடிகையுமான சிந்தியா லூர்தே கேள்வி எழுப்பி உள்ளார்.

Cynthiya Lourde: 'என்ன பாத்தா டிரான்ஸ்ஜென்டர் மாதிரி இருக்கா.. எல்லாம் பொறாமை தான்..' சிந்தியா
Cynthiya Lourde: 'என்ன பாத்தா டிரான்ஸ்ஜென்டர் மாதிரி இருக்கா.. எல்லாம் பொறாமை தான்..' சிந்தியா

என் ஒர்த் தெரியுமா?

"என்ன கிண்டல் பண்றவங்களுக்கு எல்லாம் அவங்க ஒர்த் தெரியுமா தெரியாதுன்னு தெரியல. ஆனா எனக்கு என் ஒர்த் தெரியும். ஒரு நடிகரா வேணும்னா நான் தோத்து போயிருக்கலாம். ஆனா ஒரு புரொடியூசரா நான் ஜெயிச்சிட்டேன். நான் ஜெயிச்சிட்டேனா நான் இன்னும் நெறைய பாடலாம். இன்னும் நெறைய படம் பண்ணலாம். எனக்கு தான் வாய்ப்பு அதிகம்.

என் காசு என் படம்

என்ன ரஜினி சாரோட, விஜய் சேதுபதி சாரோட, லேடி சூப்பர் ஸ்டாரோட எல்லாம் வச்சி கிண்டல் பண்ணிருக்காங்க. இங்க பிரச்சனை என்னென்னா ஒரு புரொடியூசர் எப்படி நடிக்கலாம்ங்குறது தான். அதுலயும் ஒரு பொன்னு எப்படி நடிக்கலாம்ங்குறது தான் இவங்க கேள்வி.

ஆனா இதெல்லாம் சொல்ல இவங்க யாரு. என் காசு நான் படம் எடுக்குறேன். நான் நடிக்குறேன். இஷ்டம் இருந்தா பாருங்க. இல்லைன்னா போங்க. ஆனா என்ன பத்தின ட்ரோலிங் நிக்க கூடாதுன்னு நான் நினைக்குறேன். ஏன்னா அதுக்காகவாவது என்ன பத்தி நீங்க எல்லாம் நெனச்சிட்டே இருப்பீங்க.

எல்லாம் பொறாமை தான்

அந்த பாட்டு பீச்ல எடுத்தது. அங்க இருக்க காத்தும், வெயிலும் எனக்கு ஒத்துகல. அதுனால என்னோட மேக்கப்ப கிண்டல் பண்ணாங்க. அந்த இடத்துல ஷூட் பண்ணவே முடியாத வெயில். அப்புறம் எப்படி சிரிக்க முடியும் . அந்த சீன் எல்லாம் பாத்து. என்ன காசு கொடுக்கலயா அதான் சிரிக்க மாட்டிங்குறீங்களான்னு எல்லாம் கேட்டாங்க.

என்ண பாத்தா டிரான்ஸ்ஜென்டர் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. எத வச்சு அப்படி சொல்றீங்கன்னு எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு எல்லாம் பொறாமை தான்.

இந்தியாவுலயே இல்லாத ஒரு பொன்னுக்கு இங்க பட வாய்ப்பு கிடைக்குது. ராஜா சார் மியூசிக் போட்ருக்காரு. இதெல்லாம் எப்படி நடக்கலாம்ன்னு அவங்களுக்கு எல்லாம் பொறாமை.

100 பேருக்கு வேலை தந்திருக்கேன்

சினிமா எல்லாம் இவங்க நினைக்குற மாதிரி இல்ல. இங்க நான் மில்லியன் கணக்குல என்னோட காச செலவு பண்ணிட்டு இருக்கேன். இங்க பல நூறு பேருக்கு நான் வேலை கொடுத்துருக்கேன். எனக்கு என்ன தலை எழுத்தா இங்க என்னோட காட வேஸ்ட் பண்ண.

கோவிட் டைம்ல இருந்தே தமிழ் சினிமா டவுன்ல தான் இருக்கு. படம் எடுத்தாலும் அத ரிலீஸ் பண்ண காசு இல்லாமல எவ்ளோவோ படம் இருக்கு. அத்தனை படத்துக்கு மத்தியில நான் இங்க வந்துருக்கேன்னா என்ன நீங்க எல்லாம் சப்போர்ட் தான் பண்ணனும்" என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.