Actress Poorna: "மிஷ்கினை பார்த்தாலே..!"டெவில் பட விழாவில் பூர்ணாவின் பரபர பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Poorna: "மிஷ்கினை பார்த்தாலே..!"டெவில் பட விழாவில் பூர்ணாவின் பரபர பேச்சு

Actress Poorna: "மிஷ்கினை பார்த்தாலே..!"டெவில் பட விழாவில் பூர்ணாவின் பரபர பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2024 03:54 PM IST

கல்லூரி முடிந்த பின்னரும் பிரின்சிபலை எங்கு பார்த்தாலும் நமக்கு பயம் வருவதுபோல் மிஷ்கின் மீது எனக்கு எப்போது பயம் உண்டு என நடிகை பூர்ணா கூறியுள்ளார்.

டெவில் பட செய்தியாளர்கள் சந்திப்பில் நடிரை பூர்ணா
டெவில் பட செய்தியாளர்கள் சந்திப்பில் நடிரை பூர்ணா

இதையடுத்து இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை பூர்ணா பேசியதாவது:

டெவில் எனக்கு மற்றொரு படமாக இல்லாமல் வாழ்க்கையுடன் தொடர்புடைய உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளது. நாம் கல்லூரியில்் படித்து முடித்த பின்னரும் மீண்டும் கல்லூரி முதல்வரை பார்த்தால் ஒரு வித பயமும், படபடப்பும் வருவது இயல்புதான்.

அதுபோல் தான் மிஷ்கினை பார்க்கும்போது எனக்கு அப்படியொரு உணர்வு வருகிறது. அவர் எனக்கு பரின்ஸ்பால் போன்றவர். சவரகத்தி படத்தில் என்னை ஒரு தாயாக இயக்குநர் மிஷ்கின், ஆதித்யா காட்டினார்கள். இன்று நான் நிஜமாகவே தாயாக மாற இருக்கும் போது இவர்களின் படத்தில் நடித்துள்ளேன். இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

இவர்களிடம், உங்கள் படங்களில் சிறிய கேரக்டராக இருந்தாலும் வாய்ப்பு தருமாறு அடிக்கடி சொல்வேன். மீண்டும் அதை இப்போது கூறி கொள்கிறேன்.

டெவில் படத்துக்கு மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். அவருக்கு இசை மீது இருக்கும் நாட்டம், புலமை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவரது படங்களில் பின்னணி இசை மட்டுமில்லாமல், பாடல்களில் வரும் இசை தொடர்பான எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுப்பார். அவரது இசையறிவை கண்டு வியந்துள்ளேன். எனவே அவர் இசையிலும் பெரிதாக சாதிப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு பூர்ணா கூறினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "பூர்ணா எனது வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் தாய் போல என்னை பார்த்துக்கொள்வாள். என்னுடைய குழந்தையை விட அவளது குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அவள் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன். சாகும் வரை அவள் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் பூர்ணா இருப்பாள்" என எமோஷனலாக பேசினார். இதையடுத்து மிஷ்கின் மேல் தனக்கு இருக்கும் மரியாதையை பூர்ணாவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

டெவில் ரிலீஸ் எப்போது?

டெவில் படத்தில் விதார்த், பூர்ணா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் பிப்ரவரி 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஜி.ஆர். ஆதித்யா இயக்கிய முதல் படமான சவரக்த்தி என்ற படத்தில் பூர்ணா இரண்டு குழந்தைகளுக்கு, தாயாகவும் நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கும் வேடத்தில் நடித்தார். அத்துடன் அவரது கதாபாத்திரம் காது கேட்காதவாறும் அமைந்திருக்கும்.

பிளாக் காமெடி பாணியில் அமைந்திருக்கும் இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. இந்த படத்தில் மிஷ்கினும் வில்லத்தனம் செய்யும் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின், ஆதித்யா கூட்டணியில் மீண்டும் டெவில் படத்தில் இணைந்துள்ளார் பூர்ணா. படத்தில் நடித்தபோது பூர்ணா நிஜமாகவே கர்ப்பிணிி பெண்ணாக இருந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.