Huma Qureshi: கைப்பட எழுதிய சூப்பர் ஹீரோ நாவலை வெளியிட்ட நடிகை ஹூமா குரேஷி
சூப்பர் ஹீரோ நாவல் ஒன்றை எழுதி அதை வெளியிட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி. இந்த நாவல் பின்னாளில் திரைவடிவம் பெறவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையாக இருந்து வரும் ஹூமா குரேஷி, தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து காலா படத்திலும், அஜித்குமாருடன் இணைந்து வலிமை படத்திலும் நடித்தார்.
இதையடுத்து தற்போது சினிமா தவிர வெப் சீரிஸிலும் அதிகம் தலை காட்டி வரும் ஹூமா குரேஷி, புதிதாக நாவல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது நாவல் பெயர் ஸெபா: ஆன் ஆக்சிடன்டல் சூப்பர் ஹீரோ என உள்ளது. தனது முதல் நாவல் புத்தகத்தை பெங்களூருவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் அவர் வெளியிட்டுள்ளார்.
தனது நாவல் குறித்து ஹூமா குரேஷி கூறியதாவது, "பேண்டஸி கலந்து நாவலை உருவாக்கியுள்ளேன். கொரோனா காலக்கட்டத்தில் இதை எழுத தொடங்கினேன்.
1992 முதல் 2019 காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும். முதலில் இந்த நாவலை வெப் சீரிஸாக எடுக்க நினைத்தேன். ஆனால் அத நடக்காமல் போயுள்ளது. என்றாவது ஒரு நாள் அதவும் நடக்கும். எழுத்து மூலமாக எனது படைப்பை வெளியிடும் வாய்ப்பாக இதை கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.
பொதுவாக நடிகைகள் நடிப்பு தவிர திரைப்பட தயாரிப்பு, பாடகியாக மாறுவது, நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது என தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி வருவதை பலரும் அறிந்த விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் எழுத்து மீது தீராத காதல் கொண்டவராக இருந்து வரும் ஹூமா குரேஷி, அதில் தனது திறமையும் வெளிக்காட்டியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்