HT OTT SPL: இதுல ப்ரொஃபசர் கிடையாது.. மாஸ்டர்மைண்ட் பெர்லின் தான்!
மொத்தம் 8 எபிசோட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக நகர்கிறது. Money Heist பார்த்துவிட்டு இதை பார்க்கும்போது முதலில் கதாபாத்திரங்களுடன் ஒன்றுவது கடினமாக இருக்கும்.
பெர்லின் என்பது நெட்ஃபிக்ஸில் வெளியாகி உலகப் புகழ்பெற்ற Money Heist இணையத் தொடரில் ஒரு கற்பனையான கதாபாத்திரம் ஆகும். Money Heist தொடரில் புத்திசாலித்தனமான கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டிருக்கும் ப்ரொபசர் கதாபாத்திரத்தில் நிகரான பாத்திரமாக பெர்லின் கதாபாத்திரம் எழுதப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த கதாபாத்திரம் இதற்கு முன்பு பிரான்ஸில் கொள்ளையடிக்க முயற்சித்து அதில் பிடிபடால் ஜெயிக்கும் கதை தான் Money Heist Berlin தொடரின் கதை. ஸ்பெயின் நட்சத்திரங்கள் நடித்த தொடர் இது.
மொத்தம் 8 எபிசோட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக நகர்கிறது. Money Heist பார்த்துவிட்டு இதை பார்க்கும்போது முதலில் கதாபாத்திரங்களுடன் ஒன்றுவது கடினமாக இருக்கும். ஆனால், 2வது எபிசோடில் இருந்து இந்தத் தொடரின் கதாபாத்திரங்களும் உங்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிடுகிறார்கள்.
Pedro Alonso பெர்லின் கதாபாத்திரத்தில் கொள்ளை கும்பலை வழிநடத்துகிறார். அவரது லட்சத்தியத்துக்கு துணையாக Tristán Ulloa நிற்கிறார். இவர்களின் குழுவில் Michelle Jenner, Begoña Vargas, Julio Peña ஆகியோர் உள்ளனர்.
கதை என்னவென்றால் பிரான்சில் ஏலம் விடும் பிரபலமான மையத்தில் இருந்து விலைமதிப்பற்ற ஆபரணங்களையும் பொருட்களையும் சிறு துளி கூட தடயம் இல்லாமல் கொள்ளையடித்துவிட்டு ஸ்பெயின் திரும்ப வேண்டும்.
இதுதான் கதை. இதை பெர்லின் தலைமையிலான கொள்ளை கும்பல் கச்சிதமாக நிறைவேற்றி முடிக்கிறது. அது எப்படி என்பது தான் சுவாரசியமான திக் திக் நிமிடங்கள் நிறைந்த 5 எபிசோட்கள்.
இதுவெறும் கொள்ளை அடிக்கும் தொடர் என்று அடக்கி விட முடியாது. முந்தைய Money Heist தொடரைப் போலவே, காதல், காமம், நட்பு, துரோகம், நம்பிக்கை, திருமண வாழ்க்கை, உறவுச் சிக்கல், சோகம் என வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் விஷயங்களை அலசுகிறது. இவை அனைத்தும் கொள்ளையடிப்பதன் பின்ணியில் நடக்கிறது என்பது தான் சுவாரசியம்.
கொள்ளையடித்துவிட்டு பயம் இல்லாமல் பிரான்ஸில் கார் ரேஸ் விடும் காட்சி, பின்னர் போலீஸ் சுற்றி வளைக்க வரும்போது சமயோஜிதமாக செயல்பட்டு தப்பிச் செல்வது என பெர்லின் தொடரின் கதாபாத்திரங்கள் செய்யும் செயல்கள் அனைத்து இதயத்துடிப்பு எகிறச் செய்யும்.
Money Heist தொடர் உங்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் இந்தத் தொடரும் உங்களுக்குப் பிடிக்கும். நெட்பிளிக்ஸ் தளத்தில் இத்தொடர் காணக் கிடைக்கிறது. இது டிசம்பர் 29ம் தேதி ரிலீஸ் ஆனது.
டாபிக்ஸ்