தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Exclusive: “யாருமே என் புள்ளைய கண்டுக்கல.. ஆனா தளபதி.. ஆத்மார்த்தமா பண்றார்.. இவர் ஆட்சிக்கு வந்தா” - சஞ்சனா அம்மா!

HT EXCLUSIVE: “யாருமே என் புள்ளைய கண்டுக்கல.. ஆனா தளபதி.. ஆத்மார்த்தமா பண்றார்.. இவர் ஆட்சிக்கு வந்தா” - சஞ்சனா அம்மா!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 01, 2024 11:05 PM IST

HT EXCLUSIVE: “விஜய் தரப்புல இருந்து இந்த மாதிரி பரிசு தொகை கொடுக்கப் போறோம்னு சொன்னதுமே, நான் ரொம்ப ஹேப்பியா ஆயிட்டேன். நாங்க இத எதிர்பார்க்கவே இல்லை” - சஞ்சனா!

HT EXCLUSIVE: “யாருமே என் புள்ளைய கண்டுக்கல.. ஆனா தளபதி.. ஆத்மார்த்தமா பண்றார்.. இவர் ஆட்சிக்கு வந்தா” - சஞ்சனா அம்மா!
HT EXCLUSIVE: “யாருமே என் புள்ளைய கண்டுக்கல.. ஆனா தளபதி.. ஆத்மார்த்தமா பண்றார்.. இவர் ஆட்சிக்கு வந்தா” - சஞ்சனா அம்மா!

ட்ரெண்டிங் செய்திகள்

 

நிகழ்ச்சி நிரலில் சஞ்சனா
நிகழ்ச்சி நிரலில் சஞ்சனா

ரொம்ப மகிழச்சி

இந்த அனுபவம் குறித்து சஞ்சனா பேசும் போது, "விஜய் தரப்புல இருந்து இந்த மாதிரி பரிசுத் தொகை கொடுக்கப் போறோம்னு சொன்னதுமே, நான் ரொம்ப ஹேப்பியா ஆயிட்டேன். உண்மையிலே நாங்க இத எதிர்பார்க்கவே இல்லை.

நான் மட்டுமல்லாம எங்க பேமிலி முழுக்கவே விஜய் சாரோட ரசிகர்கள்தான். விஜய் தரப்புல இருந்து முன்னாடியே, எங்க பள்ளியில இருந்து சான்றிதழ்கள் உள்ளிட்ட விபரங்களை வாங்கி, சரி பார்த்துக்கிட்டாங்க, எங்ககிட்ட எங்களோட வங்கக்கணக்கோட முதல் பக்கத்த வாங்க்கிட்டாங்க அப்புறமா நாங்க சென்னை போறதுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செஞ்சாங்க..

விஜய் சார அப்பதான் நான் முதன்முறையாக பாக்குறேன். அவர நேர்ல பார்த்தப்ப அவ்வளவு ஹேப்பியா இருந்துச்சு. முதல்ல எங்களுக்கு வைர மோதிரம் கொடுக்கப் போறாங்கன்னு தெரியாது. அத அறிவிச்சப்போ, எங்களுக்கு ஒரே ஆச்சரியமா இருந்துச்சு. கூடவே, 5000 ரூபாய்க்கான செக்கையும் கொடுத்தாங்க.. இத பார்த்த எங்களோட நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோருமே சேம ஹேப்பி..." என்றார்.

அம்மா பேட்டி

"சஞ்சனா அம்மா செல்வ பாப்பா பேசும் போது," விஜய் செஞ்சிருக்க விஷயம் உண்மையில பாராட்டப்பட வேண்டியது சஞ்சனா மாநிலத்திலேயே முதன் மதிப்பெண் எடுத்து இருக்கான்னு தெரிஞ்ச உடனே, பல தர பக்கத்திலும் இருந்தும் எங்களுக்கு வாழ்த்துகள் வந்துச்சு. அப்பதான் விஜய் தரப்புல இருந்து வந்தவங்க, இப்படியான பரிசை கொடுக்கப்போறதா சொன்னாங்க.. முதல்ல அவங்கள பத்தி எனக்கு பெருசா தெரியாது. அதுக்கப்புறம் அவங்க கடந்த வருஷம் விஜய் நடத்திய விருது நிகழ்ச்சிய பத்தி விரிவா சொன்னாங்க..

சில பேர் அரசியல் காரணங்களுக்காக பன்றாங்கண்ணு சொன்னாங்க.. ஆனா நான் பார்த்த வரைக்கும், அவங்க ஆத்மார்த்தமா செஞ்ச மாதிரிதான் இருந்துச்சு. நாங்க இங்க இருந்து பாதுகாப்பா போறதுக்கு பேருந்து உட்பட எல்லா வசதிகளையும் ரொம்ப அழகா ரெடி பண்ணி இருந்தாங்க... விஜய பார்த்தப்ப... நாங்க எல்லாருமே உங்களுடைய ரசிகர்கள்தான்னு அவர்கிட்ட சொன்னோம்... அதை கேட்டு அவர் அழகாக சிரிச்சார். தொடர்ந்து அவர்கிட்ட இருந்து அவார்டு வாங்குனோம். செக்கை வாங்கி ஸ்டேஜ் விட்டு இறங்குன அடுத்த நொடி, எங்கிட்ட அவர் கூட, நாங்க எடுத்த போட்டோவ கொடுத்துட்டாங்க. அடுத்ததா நேரா சாப்பாடு மண்டபத்துக்கு போனோம். சாப்பாடு அவ்வளவு பிரமாதமா இருந்துச்சு.

எல்லாம் முடிச்சு வெளியே வரும் போத,. எல்லாருக்கும் ஒரு கொய்யாக்கண்ணு கொடுத்தாங்க.. அத சென்னையில இருந்து பத்திரமா கொண்டு வந்து வீட்ல நட்டு வச்சிருக்கேன். விஜய் இவ்வளவு பண்ணிருக்கார்.

ஆனா எங்க நெல்லை மாவட்ட கலெக்டரோ, பஞ்சாயத்து தலைவரோ என யாரும் என் குழந்தையை கண்டுக்கவே இல்ல. திமுக 40 க்கு 40 தொகுதிகள் ஜெயிச்சு என்ன பிரயோஜனம்... இப்பவே விஜய் இவ்வளவு பண்றார். இவர் அரசியல் ஆளுமையாக மாறும் போது, இன்னும் நல்லா செய்வார்னு நம்பிக்கை வருது" என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.