Udit Narayan: ரசிகையை உதட்டில் முத்தமிட்ட விவகாரம்.. ‘உள்நோக்கத்தோடு சர்ச்சையைகிளப்புறாங்க.. 46 வருஷமா.’ - உதித் நாராயண்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Udit Narayan: ரசிகையை உதட்டில் முத்தமிட்ட விவகாரம்.. ‘உள்நோக்கத்தோடு சர்ச்சையைகிளப்புறாங்க.. 46 வருஷமா.’ - உதித் நாராயண்

Udit Narayan: ரசிகையை உதட்டில் முத்தமிட்ட விவகாரம்.. ‘உள்நோக்கத்தோடு சர்ச்சையைகிளப்புறாங்க.. 46 வருஷமா.’ - உதித் நாராயண்

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 01, 2025 01:42 PM IST

Udit Narayan: ரசிகையை முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான தருணம்; நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். என்னுடைய பிம்பம் (ரசிகர்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் பழக்கம்) அப்படியானது கிடையாது. - உதித் நாராயண்

Udit Narayan: ரசிகையை உதட்டில் முத்தமிட்ட விவகாரம்.. ‘உள்நோக்கத்தோடு சர்ச்சையை

கிளப்புறாங்க.. 46 வருஷமா.’ - உதித் நாராயண்
Udit Narayan: ரசிகையை உதட்டில் முத்தமிட்ட விவகாரம்.. ‘உள்நோக்கத்தோடு சர்ச்சையை கிளப்புறாங்க.. 46 வருஷமா.’ - உதித் நாராயண்

இந்தியாவின் மிக முக்கியமான பாடகர்

இந்தியாவின் மிகவும் முக்கியமான பாடகர்களில் ஒருவர் உதித் நாராயண். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், பல பாடல்களை இவர் பாடியிருக்கிறார். குறிப்பாக 90 காலக்கட்டங்களில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.

செல்ஃபி எடுக்க பெண்

பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் இசைக்கச்சேரியும் நடத்தி வரும் இவர், அண்மையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். அந்த இசைக்கச்சேரியில் அவர் பாடிக்கொண்டிருக்கும் போது அவரிடம் செல்ஃபி எடுக்க பெண் ஒருவர் முன் வந்தார். அதை உதித் நாராயண் அனுமதித்தார்.

கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண்..

இந்த நிலையில் அவருக்கு செல்ஃபி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே, எதிர்பாராதவிதமாக அந்தப்பெண் உதித்தின் கன்னத்தில் முத்தமிட்டார்.

உதட்டில் முத்தம் கொடுத்த உதித்

இந்த நிலையில், அந்தப்பெண்ணிற்கு முத்தமிட முயன்ற உதித் நாராயணன் அந்தப்பெண்ணின் உதட்டில் முத்தமிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அந்தப்பெண் ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

இதனைப்பார்த்த மக்களும் கரகோஷத்தை எழுப்பி தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் உதித் நாராயனணை கண்டித்து, தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து அவரை ட்ரோல் செய்தனர்.

இந்த நிலையில் உதித் நாராயண் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சிட்டி இணையதளத்திற்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, ‘ சிலர் இதனை ஊக்குவித்து தங்களுடைய அன்பை காட்டுகிறார்கள். இசைக்கச்சேரியில் நிறைய பேர் இருந்தார்கள். அங்கு என்னுடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள். இருப்பினும், ரசிகர்கள் அவர்களை நான் சந்திக்கும் வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறார்கள்.

46 வருடங்களாக இருக்கிறேன்

அதில் சிலர் அவருடைய கைகளை, கைகுலுக்குவதற்காக நீட்டுகிறார்கள். சிலர் கையை முத்தமிடுகிறார்கள். இந்த சர்ச்சை மிகவும் உள்நோக்கத்துடன் செய்யப்படுவதாக நினைக்கிறேன். என்னுடைய குடும்பம் இந்த சர்ச்சையை உணர வேண்டும் என்று நினைக்கிறார்கள். பலரும் இதனை உணரவேண்டும். நான் மேடையில் பாடும் போது ஒரு விதமான பைத்தியக்காரத்தனம் நிலவும். ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.’ என்று பேசினார். 

ரசிகையை முத்தமிட்டது குறித்து பேசிய அவர், ‘ரசிகையை முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான தருணம்; நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். என்னுடைய பிம்பம் (ரசிகர்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் பழக்கம்) அப்படியானது கிடையாது. உண்மையில், அவர்கள் என் மீது அன்பை பொழியும் போது, நான் என்னுடைய கைகளை மடக்கி வைத்துக்கொள்வேன். மேடையில் இருக்கும் போது நான் அவர்களை கைகூப்பி வணங்குவேன்’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.