தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Exclusive Interview: கண் தெரியாமல் அவதிப்பட்ட வடமாநில இளைஞர்.. அமைதியாக அஜித் பார்த்த மிகப்பெரிய விஷயம்!

HT Exclusive Interview: கண் தெரியாமல் அவதிப்பட்ட வடமாநில இளைஞர்.. அமைதியாக அஜித் பார்த்த மிகப்பெரிய விஷயம்!

Aarthi Balaji HT Tamil
May 08, 2024 05:30 AM IST

HT Exclusive Interview: நமது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு தொலைபேசி வாயிலாக வலைப்பேச்சு யூ-டியூப் சேனலை சேர்ந்த அந்தணன் பிரத்தியேகமாக அஜித் தொடர்பான தகவலை தெரிவித்து இருக்கிறார்.

அஜித்
அஜித்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ள நினைக்கும் நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். படங்களில் மட்டுமே இவரை பார்க்க முடியுமே தவிர பொது நிகழ்ச்சியோ, பேட்டியோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சியிலோ இவரை பார்க்க முடியாது.

இதனிடையே நடிகர் அஜித் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு தனது சொந்த செலவில் உதவி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக நமது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு தொலைபேசி வாயிலாக வலைப்பேச்சு யூ-டியூப் சேனலை சேர்ந்த அந்தணன் பிரத்தியேகமாக இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

நடந்தது என்ன?

” ஒருமுறை அஜித் ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது வழக்கமாக புரொடக்ஷன் டிமிலிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வந்தது. அப்பொழுது வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உணவு பரிமாறும் போது சரிவர பரிமாறாமல் இருந்து இருக்கிறார். அது அங்கு இருப்பவர்கள் யாரும் பார்க்காத நிலையில் அஜித் மட்டும் அதை உன்னிப்பாக கவனித்து இருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து அனைவரும் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு அந்த  நபரை அழைத்து எதனால் உணவு சரியாக பரிமாறப்படவில்லை என விசாரித்து இருக்கிறார். அப்போது தான் அந்த நபரின் கண்ணில் பார்வை கோளாறு இருப்பது அஜித்திற்கு தெரிய வந்தது.

உடனே, அந்த நபருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார். சென்னை வந்தவுடன் பிரபலமாக இருக்கும் கண் மருத்துவர் ஒருவரை சந்தித்து அந்த நபர் குறித்து அஜித் கூறி இருக்கிறார். மேலும் அவனை பரிசோதனை செய்ததில் அறுவை சிகிச்சை செய்தால் கண் பார்வை சரியாகிவிடும் என மருத்துவர் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து தனது சொந்த செலவில் அவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து வைத்தார் அஜித் குமார். மேலும் அவனைப் பார்த்துக் கொள்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதால் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவனை சென்னைக்கு வர வைத்து தனது சொந்த செலவில் வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்து அதற்கான செலவையும் அவரே பார்த்து கொண்டு உதவி செய்திருக்கிறார் " என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்