பாலச்சந்தர் சொன்ன ஒரு வார்த்தை.. 10 நிமிடத்தில் தேவா செய்த கம்போசிங்.. ரெக்க கட்டி பறக்குதடி பாடல் பிறந்த கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாலச்சந்தர் சொன்ன ஒரு வார்த்தை.. 10 நிமிடத்தில் தேவா செய்த கம்போசிங்.. ரெக்க கட்டி பறக்குதடி பாடல் பிறந்த கதை!

பாலச்சந்தர் சொன்ன ஒரு வார்த்தை.. 10 நிமிடத்தில் தேவா செய்த கம்போசிங்.. ரெக்க கட்டி பறக்குதடி பாடல் பிறந்த கதை!

Divya Sekar HT Tamil
Updated Feb 15, 2025 06:14 AM IST

Story Of Song : அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற "ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்" என்ற பாடல் உருவான விதம் குறித்து தேவா ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

பாலச்சந்தர் சொன்ன ஒரு வார்த்தை.. 10 நிமிடத்தில் தேவா செய்த கம்போசிங்.. ரெக்க கட்டி பறக்குதடி பாடல் பிறந்த கதை!
பாலச்சந்தர் சொன்ன ஒரு வார்த்தை.. 10 நிமிடத்தில் தேவா செய்த கம்போசிங்.. ரெக்க கட்டி பறக்குதடி பாடல் பிறந்த கதை!

ரெக்க கட்டி பறக்குதடி பாடல் கதை

அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற "ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்" என்ற பாடல் உருவான விதம் குறித்து தேவா ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், ”பாலச்சந்தர் சார் எனக்கு போன் செய்து தேவா எனக்கு நாளைக்கு ஒரு பாட்டு வேண்டும் ஏனென்றால் நாளைக்கு மூன்று மணிக்கு ரஜினி, குஷ்பூ இருவரும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள். எனவே கண்டிப்பாக நாளை எனக்கு ஒரு பாடல் வேண்டும். அவர்களுக்கெல்லாம் வேற கால்ஷீட் இல்லை. நீதான் எனக்கு பாடலை முடித்துக் கொடுக்க வேண்டும் என சொன்னார்.

10 நிமிடத்தில் கம்போசிங் செய்த தேவா

அதற்கு நான் எப்படி சார் முடியும், இது ரஜினி சார் படம் அதுவும் உங்க கம்பெனி படம் சுரேஷ் கிருஷ்ணா டைரக்ஷன் எப்படி சார் நாளைக்கே பாட்டு வேண்டுமென்றால் எப்படி முடியும் என சொன்னேன். அதற்கு அவர் நீ கண்டிப்பாக செய்வாய் தேவா. என்னய்யா உன்னை பற்றி உனக்கே தெரியவில்லையா? என அவர் சொல்ல அந்த ஒரு வார்த்தை தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. மறுநாள் காலையில் ஏழு மணிக்கு பாடல் கம்போஸ் செய்கிறேன். அது என்ன பாடல் என்று எனக்கு தெரியாது? எனவே அனைத்து இசை கலைஞர்களையும் நான் வரவழைத்து விட்டேன்.

காலை 7:00 மணிக்கு நான் ஸ்டுயோவுக்கு வந்துவிட்டேன். வைரமுத்து அவர்களும், சுரேஷ்கிருஷ்ணா அவர்களும் அமர்ந்து ஆர்கெஸ்ட்ராவிற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மணிக்கு பாலுவும், சித்ராவும் பாடி முடித்த பின் பாடலை சூட்டிங்-க்கு மூன்று மணிக்கு கொடுத்து அனுப்ப வேண்டும். நான் 7:00 மணிக்கு ஆரம்பித்து ஏழு பத்துக்கு எல்லாம் கம்போசிங் முடித்து விட்டேன். அப்படி வெளிவந்த பாடல் தான் "ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்” என்ற பாடல்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Divya Sekar

TwittereMail
திவ்யா சேகர், 2019 முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் உண்டு. இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முடித்துள்ளார். இவர் தமிழ்நாடு, பொழுதுபோக்கு, லைஃப் ஸ்டைல்,ஜோதிடம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். இவருக்கு பொழுதுபோக்கு திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, புது இடத்திற்கு சென்றால் அதனை எக்ஸ்ப்ளோர் செய்து வீடியோவாக பதிவிடுவது ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.