பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்து நடிகர் சிரஞ்சீவி பகிர்ந்த தகவல்! எப்படி இருக்கிறார் மார்க் சங்கர்?
டோலிவுட் நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கரின் உடல்நிலை குறித்து அவரது சகோதரர் சிரஞ்சீவி தகவல் தெரிவித்துள்ளார். மார்க் சங்கர் விரைவில் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். பவன் கல்யாணின் மகன் விரைவில் குணமடைய ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பல நடிக்கர்களா பிரார்த்தனை செய்திருந்தனர். பவன் கல்யாண் தனது மகனின் உடல்நிலை குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். இப்போது இது குறித்து நடிகரும் பவன் கல்யாணின் சகோதரருமான சிரஞ்சீவி, மார்க் சங்கரின் உடல்நிலை குறித்து பற்றிய தகவலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், "எங்கள் மகன் மார்க் சங்கர் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் அவர் மேலும் குணமடைய வேண்டும். எங்கள் குலதெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் கருணையால், அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவார். கடவுள் எங்களுக்கு ஆதரவாக நின்று அந்த சிறுவனை ஒரு பெரிய சோகத்திலிருந்து காப்பாற்றினார்.
