HBD Ajith: அமராவதி படத்தில் அஜித் நடித்தது எப்படி? முதல் சம்பளம் இவ்வளவு தானா..சோழா பொன்னுரங்கம் சொன்ன சுவாரஸ்ய தகவல்
Ajith Birthday: அமராவதி படத்தில் அஜித் நடிக்க வந்தது எப்படி, அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பள விவரம் உள்ளிட்ட விஷயங்களை, பட தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தெரிவித்து உள்ளார்.
1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான திரைப்படம், அமராவதி. நடிகர் அஜித் இந்த படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை சோழா கிரியேஷன்ஸ் சார்பில், சோழா பொன்னுரங்கம் தயாரித்து இருந்தார். அஜீத் நடித்த இந்த காதல் காவியம். இதில் அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்து இருந்தார். நடந்து கொண்டிருந்த போது தான் அஜித் பைக் ரேஸ் விபத்தில் சிக்கினார். பின்னர் அவருக்கு நடிகர் விக்ரம் டப்பிங் பேசினார்.
அமராவதி வீட்டை விட்டு ஓடிப்போகும் அப்பாவிப் பெண். அவள் நல்ல மனதுள்ள ஒரு மனிதனின் வீட்டில் அடைக்கலம் அடைகிறாள். அங்கே அவள் நன்றாகப் பராமரிக்கப்படுகிறாள். அர்ஜுன்(அஜித்) அவளை காதலிக்கும்போது அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் என்ன என்பது தான் கதை. இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.
இந்நிலையில் அமராவதி படத்தில் அஜித் நடிக்க வந்தது எப்படி, அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பள விவரம் உள்ளிட்ட விஷயங்களை, பட தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தெரிவித்து உள்ளார்.
ஊட்டியில் தொடங்கிய படப்பிடிப்பு
இது தொடர்பாக முன்னதாக சோழா பொன்னுரங்கம் We talkiess யூ-டியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், ” இயக்குநர் செல்வா என்னிடம் வந்து அமராவதி பட கதை சொல்லும் போது, புது முகங்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அவர் சிலரை காட்டினார், ஆனால் எனக்கு பிடிக்கவில்லை. நேரம் இல்லை என்பதால் உடனே ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 15 நாட்கள் நடந்தது.
அஜித்துடன் முதல் சந்திப்பு
அவசர அவசரமாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சங்கவியை, பாக்யராஜ் அலுவலகத்தில் இருந்து நான் தான் தேர்வு செய்தேன். அந்த நடிகர் சரியாக நடிப்பை வழங்கவில்லை. இதன் விளைவாக எங்களுக்கு நாட்கள் தான் சென்றது. ஒரு விளம்பரத்தில் அஜித்தை பார்த்தேன். பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது தான் நான் அவரை முதலில் சென்று சந்தித்தேன்.
அஜித்தின் முதல் சம்பளம் என்ன
ரொம்ப வாலு பையன் அஜித். எப்போது படப்பிடிப்பு, தமிழ் படத்தில் தான் நடிப்பேன் என அஜித் என்னிடம் சொன்னார். இரவோடு இரவாக அங்கு படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் காலை என்னுடன் படப்பிடிப்புக்கு வந்தார். அஜித்தை எனக்கு முதலில் பிடிக்க காரணமே, எடுத்தவுடன் எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என கேட்டார். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது போன்று படத்தில் ஆர்வமாக இருப்பவர்கள் கேட்பது தவறு இல்லை. அது தான் தொழில் நம்பிக்கை.
அப்பவே 5 ஆயிரம் ரூபாய் கையில் கொடுத்து அனுப்பினேன். அதற்கு பிறகு இயக்குநருடன் மிகவும் கஷ்டப்பட்டார். பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டு அமராவதி படம் முடிக்கப்பட்டது “ என்றார்.
நன்றி: We talkiess
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்