Ajithkumar: பீறிட்டு வந்த ரத்தம்.. மருத்துவமனையில் மாடாய் உழைத்த அஜித்.. மனதை பறிகொடுத்த ஷாலினி - அஜித் - ஷாலினி காதல்!
‘காயம் ஆறும் வரை அஜித் ஷாலினியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். அந்த அக்கறைதான் அஜித்திடம் ஷாலினியை மனதை பறிகொடுக்க வைத்தது.’ - அஜித் - ஷாலினி காதல் கதை

துபாயில் நடைபெற்ற கார் ரேசில் அஜித்குமார் அணி 991 பிரிவில் 3 வது இடத்தை பிடித்தது. பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறிய நிலையில், தன்னுடைய கணவர் தனக்கு பிடித்த விஷயத்தில் ஜெயித்ததை பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தார் அவருடைய மனைவி ஷாலினி. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்களுடைய காதல் கதையை இங்கே நினைவு கூறலாம்.
அஜித் - ஷாலினி காதல்
அமர்க்களம் படத்தின் போதுதான் ஷாலினியும் அஜித்தும் சந்தித்துக் கொண்டார்கள். ஷாலினியை பார்த்த மாத்திரத்திலேயே அஜித்திற்கு அவரை பிடித்துவிட்டது.ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஷாலினி கத்தியை வைத்து தன் கையை அறுத்துக் கொள்வது போல நடிக்க வேண்டும்.
ஆனால், அவர் தெரியாமல் கையை உண்மையிலேயே அறுத்து விட ரத்தம் கொட்டத் தொடங்கிவிட்டது. இதனையடுத்து உடனடியாக ஷாலினியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அந்தக் காயம் ஆறும் வரை அஜித் ஷாலினியை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். அந்த அக்கறைதான் அஜித்திடம் ஷாலினியை மனதை பறிகொடுக்க வைத்தது.
இருவர் மனமும் ஒத்துப்போக, காதலிக்க ஆரம்பித்தார்கள். இதனையடுத்து இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்;இந்த தம்பதிக்கு தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.
காதல் கோட்டை காதல்
காதல் கோட்டை திரைப்படத்தின் போது தான் கீராவும், அஜித்தும் சந்தித்துக் கொண்டார்கள்; அப்போது அவர்களுக்கு இடையேயான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலுக்குள் நுழைய ஆரம்பித்தது; இதனையடுத்து அவர்கள் இணைந்த தொடரும் திரைப்படத்தில், காதல் மலர்ந்து இருவரும் காதலர்களாக வலம் வரத்தொடங்கினார்கள்.
அஜித் தன்னுடைய காதலை பொழியும் வண்ணம் கீராவுக்கு காதல் கடிதங்களையெல்லாம் எழுதியதாக கூறப்படுகிறது; ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், கீதாவின் அம்மா, அஜித்தை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் அவ்வளவு சின்ன வயதிலேயே கீரா கல்யாணம் செய்து கொண்டால் கீராவின் கெரியர் காலியாகிவிடும் என்று திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
உறவில் விரிசல்
இதனையடுத்துஅஜித் மற்றும் கீராவின் உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது; கீராவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் அவர்களது காதல் முறிவுக்கு காரணமாக அமைந்தது; 1998 ஆம் ஆண்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.
இந்த பிரேக்கப் தொடர்பாக அஜித் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய பொழுது, ‘நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தோம்; எனக்கு கீராவை மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லாமே மாறிவிட்டது; நான் முன்பு பார்த்த கீரா இப்போது இல்லை; அவர் நிறைய மாறிவிட்டார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார்’ என்று பேசினார்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்