Actor Pandian: வாய்ப்பு கிடைச்சும் அவமானம்.. பயத்திலே கிடைத்த வெற்றி.. நடிகர் பாண்டியன் மகன் ஷேரிங்ஸ்
Actor Pandian: பாரதிராஜாவே என் அப்பாவை பார்த்து வாய்ப்பு கொடுக்க சம்மதித்தும் சுற்றி இருந்தவர்களால் அவமானப்படுத்தப்பட்டார் என நடிகர் பாண்டியணின் மகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Actor Pandian: பாரதிராஜாவால் மண் வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப் பட்டவர் பாண்டியன். பின், இவர் தன் எதார்த்த நடிப்பால், பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றத்தால் மக்களைக் கவர்ந்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக வளர்ந்து வந்தார்.
பின், குடியின் பிடியில் சிக்கி, உயிரிழந்தார். இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் நடிகர் பாண்டியனின் மகன், தன் தந்தை குறித்தும் அவர் சினிமாவிற்கு வந்த கதை குறித்தும் பேசியுள்ளார்.
பாரதிராஜா சார் கைய பிடிச்சிட்டாரு
அந்தப் பேட்டியில், " அப்பா 10வது வரைக்கும் படிச்சாரு. அவரு படிச்ச ஸ்கூல்ல இவரு ஒரு சண்டியர் மாதிரி இருந்தாராம். அப்புறம் அவரு மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல வளையல் வியாபாரம் பண்ணிட்டு இருந்தாராம். அப்போ வாரம் வாரம் கலெக்ஷனுக்கு போவாரு. அந்த டைம்ல தான் பாரதிராஜா சார பாத்திருக்காரு. அவருகிட்ட ஆட்டோகிராப் வாங்க போனப்போ, அவரோட கைய நல்லா அழுத்தி பிடிச்சிருக்காரு.
பாரதிராஜா சொல்லியும் அவமானப்பட்ட பாண்டியன்
அப்போ பாரதிராஜா சார் அப்பாவ பாத்து நீ யாரு என்ன பண்றன்னு எல்லாம் விசாரிச்சிருக்காரு. அப்புறம் அப்பா கடைக்கு வந்து, நீ என் கூட வர்றியா. நான் உன்ன சினிமாவுல நடிக்க வைக்க டெஸ்ட் பண்ணனும்ன்னு சொல்லிருக்காரு.
அப்பாவும் அவங்களோட போக கிளம்பனப்போ, சித்ரா லட்சுமணன் சார் அப்பாவ கார்ல ஏத்தலயாம். யாருன்னே தெரியாதவங்கள எல்லாம் கார்ல ஏத்துறிங்கன்னு சண்டை போட்டாங்களாம். அப்போ தான், பாரதிராஜா சார் அவன பாத்தப்போ இந்த உலகத்தையே மறந்துட்டேன். அவன்கிட்ட என்னமோ இருக்குன்னு சொல்லி கூட்டிட்டு போனாறாம்.
ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு
அப்புறம் தேனிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனப்போ கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லிட்டு உள்ள போயிருக்காரு. ஷூட்டிங்கு ஆள் எடுக்க போறேன். இங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பாத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு போகும் போது, கமலா தியேட்டர் ஓனரும் எவன் எவன்லாமோ நடிக்க வர்றான் அங்க ஓரமா போய் நில்லுன்னு சொல்லிட்டாங்களாம். அப்போ அப்பாக்கு ரொம்ப ஒரு மாதிரி கஷ்டம் ஆகிடுச்சாம்.
நீ தான் என் படத்தோட ஹீரோ
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வந்த பாரதிராஜா சார், ஒரு கைப்பிடி மண்ணு கொடுத்து இதுல எத்தன துகள் இருக்குன்னு சொல்லுன்னு சொன்னாராம். அப்போ, அப்பா ஒரு 3500 இருக்கும்ன்னு சொன்னதும் நீ தான் என் படத்தோட ஹீரோன்னு முடிவு பண்ணிட்டேன்னு சொல்றாராம். இதக் கேட்ட அப்பா அப்படியே ஆடிப் போயிட்டாராம்.
பயத்தில இருந்தவருக்கு கொண்டாட்டம்
ரேவதி மேடமோட அவரு படம் எல்லாம் நடிச்சு முடிச்சுட்டாரு. அதுக்கு அப்புறம் நாளைக்கு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, அப்பாக்கு இன்னைக்கே பயம் வர ஆரம்பிச்சிடுச்சாம். என்னை மக்கள் ஏத்துப்பாங்களா, நான் கேமராவுல அழகா தெரியுவனான்னு எல்லாம் ரொம்ப யோசிச்சாறாம். அடுத்த நாள் மக்களோட மக்களா வந்து படம் பாக்கும் போது படம் முடிஞ்சதும் அப்பாவ எல்லாம் தூக்கி கொண்டாடுனாங்களாம்" என்று தன் அப்பா பற்றி பெருமையைக பேசியிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்