Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 12, 2025 09:30 PM IST

Top Cinema News Today: மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய நபர் மீது நடிகை புகார், வாடிவாசல் படத்தின் ஹீரோயின், ரேஸில் வெற்றி பெற்ற அஜித், மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்
மனஉளைச்சலை தரும் நபர் மீது நடிகை புகார்.. ராஷ்மிகா மன்னிப்பு.. அஜித் வெற்றி! டாப் சினிமா செய்திகள்

12 ஆண்டுகள் தாமதத்துக்கு பின்னர் வெளியாகியிருக்கும் இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து பொங்கல் ரிலீஸாக காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

துபாய் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்த அஜித் அணி

துபாயில் நடைபெற்ற துபாய 24H கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் ரேஸிங் என்ற தனது அணியுடன் பங்கேற்றார் நடிகர் அஜித்குமார். இந்த போட்டியில் பல்வேறு இடர்பாடுகளை கடந்து அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.

அஜித்குமார் ரேஸிங் அணி 991 பிரிவில் மூன்றாவது இடத்தையும், GT4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் என்ற விருதையும் பெற்றுள்ளது. ரேஸில் வென்ற பரிசை தனது மகன் ஆத்விக் கையில் கொடுத்து அஜித்குமார் கொண்டாடினார். அத்துடன் ஷாலினிக்கு லிப் கிஸ் கொடுத்தும், மகள் அனோஷ்காவை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அஜித் குமார் ரேஸ் வெற்றி தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மூன்று படங்களுக்கு ஹீரோயினாக கார்த்திக் சுப்புராஜ் கமிட் செய்த பிரபலம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன்பென்ச் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து அவரது நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக நடிக்க சமூக வலைத்தள பிரபலமான நிஹரிகா கமிட் செய்யப்பட்டுள்ளார். இவர் 6 மில்லியனுக்கு மேல் பலோயர்களை கொண்டவராக உள்ளார்

மிர்ச்சி சிவாவின் சூதுகவ்வும் ஓடிடி ரிலீஸ்

மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் சூது கவ்வும் 2. சூது கவ்வும் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்போது படம் ஜனவரி 14ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய நபர் மீது நடிகை புகார்

சமூக ஆர்வலர் ஒருவர் தன்னையும் தன் குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார் என்று மலையாள நடிகை ஹனி ரோஸ் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் தொழிலதிபர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்த நிலையில், சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாபி செம்மனூரின் கைது சம்பவத்தால் கோவமடைந்த ராகுல் ஈஸ்வர் என்ற நபர் தொடர்ந்து தன்னையும் தன் குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காளையுடன் சூரி பகிர்ந்த விடியோ

ஜல்லிக்கட்டு காளையுடன் இருக்கும் விடியோவை தனது சமூக வலைத்தள பக்கித்தில் பகிர்ந்திருக்கும் நடிகர் சூரி, “பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் - ராஜாக்கூர் கருப்பன்” என குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டில் களம் இறங்க இருக்கும் தனது காளை குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் நடிகர் சூரி

ஜீவா படத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கேம்

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் அகத்தியா படம் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது. பேன்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்தை புரொமோட் செய்யும் விதமாக பிரத்யேகமாக விளையாட்டு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது

வடிவாசல் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் ஹீரோயினாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழில் தனுஷ் ஜோடியாக ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் சூர்யாவுக்கு முதல் முறையாக ஜோடியாக உள்ளார்

பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்கு சத்யராஜ் நக்கல் விடியோ

பெரியார் குறித்து சர்ச்சை கருத்து பேசிய சீமானுக்கு பதிலடி தரும் விதமாக விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் சத்யராஜ். அதில், சீமான் பெயரை குறிப்பிடாமலேயே தனது ஸ்டைலில் அவரை ட்ரோல் செய்துள்ளார். பெரியாரை பற்றி புலம்பும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உழவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என கார்த்தி பேச்சு

நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் பவுண்டேஷன் என்கிற அமைப்பின், உழவன் விருதுகள் 2025 விழா சென்னையில் நடைபெற்றது. இந்த ஆண்டில் இந்த ஆண்டில் சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர், நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு, மாபெரும் வேளான் பங்களிப்பு, கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு, சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வென்று ஒவ்வொருவருக்கும் ரூ. 2 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய கார்த்தி, "பொங்கல் தினத்தில் மட்டும் உழவர்களை பற்றி நினைக்காமல், அவர்களுக்கு எல்லா நேரங்களிலும் நம்மால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும். உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசினார்

மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது காயமடைந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தனது காலில் கட்டு அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இது இனிய புத்தாண்டாக இருக்கும். எனது மதிப்புமிக்க உடற்பயிற்சி எனும் கோவிலில் நான் உடற்பயிற்சி செய்தபோது காயமடைந்தேன். இதனால் நான் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு 'ஹாப் முறையில்' இருக்கப் போகிறேன். அது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இதையடுத்து நான் தாமா, சிக்கந்தர் மற்றும் குபேரா படத்தின் செட்களுக்கு மீண்டும் செல்வேன் என்று தெரிகிறது!

என் இயக்குநர்கள், தாமதத்திற்கு மன்னிக்கவும்... என் கால்கள் தற்போது படப்பிடிப்புக்கு பொருத்தமானவை அல்ல, அவை சரியானதை உறுதிப்படுத்திக் கொண்டு நான் விரைவில் திரும்பி வருவேன் எனக் கூறியுள்ளார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.