KGF Chapter 3 Movie: கொண்டாட்டத்திற்கு நடுவே கேஜிஎஃப் 3 படத்தின் அப்டேட்? படக்குழுவால் குஷியான ரசிகர்கள்..
KGF Chapter 3 Movie: ஹோம்பாலே பிலிம்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டு, கேஜிஎஃப் சாப்டர் 3 குறித்த ஒரு சிறிய குறிப்பை அளித்துள்ளது.

KGF Chapter 3 Movie: கன்னட சினிமாவை உலக அளவிற்கு கொண்டு போய் பெருமை சேர்ந்த்திய படம் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படம் இதுவரை 2 பாகங்கள் வளிவந்துள்ள நிலையில், மக்கள் எல்லாம் 3 ஆம் பாகத்திற்கு காத்திருக்கின்றனர், இந்த சமயத்தில், ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் (ஏப்ரல் 14) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
மேலும் படிக்க| ஓடிடி
பாக்ஸ் ஆபிஸ் வெற்றி
பாக்ஸ் ஆபிஸில் பல புதிய சாதனைகளை படைத்த இந்த திரைப்படம், வசூல் விஷயத்தில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியது. ராக்கிங் ஸ்டார் யஷ்-ன் திரை வாழ்க்கைக்கும் இந்த ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ ஒரு பெரிய வெற்றியை அளித்தது. ஹோம்பாலே பிலிம்ஸ் பேனரில் விஜய் கிராங்கதூர் தயாரித்த இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க, ரவி பாஸ்ரூர் இசை அமைத்தார். மேலும் பூவன் கவுடா ஒளிப்பதிவு, சிவகுமார் கலை இயக்கம் ஆகியவையும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.
கேஜிஎஃப் 3 அப்டேட்
ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் சாப்டர் 3 குறித்த ஒரு குறிப்பை இயக்குனர் பிரசாந்த் நீல் அளித்திருந்தார். அதன்படி, அன்றிலிருந்து மூன்றாம் பாகம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இதுவரை சாப்டர் 3 குறித்த எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. திரைப்படம் உருவாகும் என்பது மட்டும் உறுதி என ஹோம்பாலே பிலிம்ஸ் முன்பு தெரிவித்திருந்தது. இப்போது ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ திரைப்படத்திற்கு 3 வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து ʻகேஜிஎஃப் சாப்டர் 3ʼ திரைப்படம் குறித்த ஒரு சிறிய குறிப்பை ஹோம்பாலே பிலிம்ஸ் அளித்துள்ளது.
கேஜிஎஃப் சாப்டர் 3 குறித்த அறிவிப்பு
ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ திரைப்படம் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ʻ3ʼ என்ற எண் அதிகமாக காணப்படுகிறது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையும், 3-ம் பாகம் குறித்தும் மறைமுகமாக ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது. ʻ சாப்டர் 3ʼ என்ற எழுத்துடன் சீயூ சூன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், விரைவில் ʻ சாப்டர் 3ʼ குறித்த பெரிய அப்டேட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
1200 கோடி வசூல்
யஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்த இந்த திரைப்படம் கன்னடம் மட்டுமல்லாமல், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா அளவில் ʻகேஜிஎஃப் சாப்டர் 2ʼ திரைக்கு வந்தது. 2020 ஏப்ரல் 14 அன்று திரைக்கு வந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய் வசூலித்த முதல் கன்னட திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது.
2029-க்கு கேஜிஎஃப் 3 வருமா?
ஹோம்பாலே பிலிம்ஸ் பல்வேறு திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் பிஸியாக உள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் படத்துடன், சலார் பார்ட் 2-யும் இயக்க வேண்டும். சலார் படத்திற்கு முன்பு கேஜிஎஃப் 3 படத்தை இயக்க வேண்டும். நடிகர் யஷ் டாக்ஸிக் படப்பணிகளில் பிஸியாக உள்ளார். இன்னும் 2026 ஏப்ரலில் இந்த திரைப்படம் வெளியாகும். அந்த திரைப்படம் முடிந்த பின்னர் கேஜிஎஃப் 3 படப்பணி தொடங்க வாய்ப்பு உள்ளது. 2026-ல் படப்பணி தொடங்கினால் 2029-ல் வெளியாகும். இந்த விஷயத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

டாபிக்ஸ்