Pushpa 2 OTT: 'ஃபிசிக்ஸ் எல்லாம் தேவையில்ல.. புஷ்பாவை பார்த்து மார்வெல் கத்துக்கணும்..' பாராட்டும் ரசிகர்கள்
Pushpa 2 OTT: புஷ்பா 2 திரைப்படம் மேற்கத்திய ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தப் படத்தைப் பார்த்த பல ஹாலிவுட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Pushpa 2 OTT: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம், வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், ஓடிடியிலும் சக்கை போடு போட்டு வருகிறது. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த ஆக்ஷன் திரைப்படம், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று, பல சாதனைகளைப் படைத்தது. இப்போது ஓடிடியிலும் புஷ்பா 2 சாதனை புரிந்து வருகிறது. ஹாலிவுட் ரசிகர்களும் பாராட்டுகளால் மழை பொழிந்து வருகின்றனர்.
மேற்கத்திய ரசிகர்கள் மயக்கம்
புஷ்பா 2 திரைப்படம் ஜனவரி 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸில் முதலிடத்தில் உள்ள இந்தப் படம், உலக அளவில் டாப்-10 இல் இடம்பிடித்துள்ளது. இதனால், ஆங்கில சப்டைட்டிலுடன் இந்தப் படத்தைப் பல ஹாலிவுட் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மார்வெல் கத்துக்கணும்
புஷ்பா 2 படத்தைப் பார்த்து, அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கும் மார்வெல் நிறுவனத்தை பலர் விமர்சித்து வருகின்றனர். மார்வெல் படங்களில் சமீபத்தில் கிரியேட்டிவிட்டி குறைந்து வருவதாகவும், இதுபோன்ற படங்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 20வது முறையாக அதே சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்குவதற்குப் பதிலாக புஷ்பா 2 படத்தைப் பார்த்து ஹாலிவுட் குறிப்புகள் எடுக்க வேண்டும் என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.
நல்லா இருந்தா ஃபிசிக்ஸ் பார்க்க மாட்டோம்
புஷ்பா 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஃபிசிக்ஸுக்கு ஒத்துவரவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், படம் நன்றாக இருந்தால் ஃபிசிக்ஸ் பார்க்க மாட்டோம் என்று ஒரு மேற்கத்திய பயனர் கருத்து தெரிவித்துள்ளார். “பார்க்க நன்றாக இருந்தால் ஃபிசிக்ஸ் பற்றி கவலைப்பட மாட்டேன். அருமையான காட்சி” என்று ஒரு நெட்டிசன் எழுதியுள்ளார். மார்வெல்லுக்கு இதுபோன்ற கிரியேட்டிவிட்டி இல்லாமல், பட்ஜெட் மட்டும் அதிகம் என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க படங்களை விட பெஸ்ட்
சில நவீன அமெரிக்க படங்களை விட புஷ்பா 2 மிகவும் சிறப்பாக உள்ளது என்று ஒரு நெட்டிசன் எழுதியுள்ளார். “ஒரு திரைப்படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம்ப முடியாத அளவிற்கு படம் இருக்க வேண்டும். எனக்கு இந்திய திரைப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். ரியலிஸ்டிக் போன்றவற்றை நான் கவலைப்பட மாட்டேன்” என்று ஒரு மேற்கத்திய பயனர் ட்வீட் செய்துள்ளார். மொத்தத்தில், புஷ்பா 2 திரைப்படத்திற்கு ஹாலிவுட் மக்களிடமிருந்து அதிக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
டாப் 10ல் இடம்பிடித்த புஷ்பா
புஷ்பா 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது டாப்-10 இல் இடம்பிடித்துள்ளது. இந்தப் படத்தின் ரீலோடெட் வெர்ஷன் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் ரூ.1,850 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ஃபாஹத் பாசில், ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், ஜகதீஷ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்