92 விருதுகள்! கின்னஸ் புத்தகத்தில் இடம்! ரிரீலிஸ் ஆகப் போகும் ஹிரித்திக் ரோஷனின் முதல் படம்! பிறந்தநாளில் ட்ரீட் தான்!
ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முதல் படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் 92 விருதுகளை வென்று கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தது.
சமீபகாலமாக இந்தியா சினிமாவில் வெற்றி பெற்ற பழைய படங்களை ரிரீலிஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ரிரீலிஸ் செய்யப்பட்ட படங்களும் புதியதாக வெளியாக படங்களை விட ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெறுகின்றன. தமிழ், தெலுங்கு சினிமா உலகில் இது அதிகமாக இருந்து வந்த நிலையில் இந்தி திரை உலகிலும் இது ஆரம்பமாகியுள்ளது. அப்படம் வெளியான அதே நாள் அல்லது அந்த நடிகரின் பிறந்தநாள் என இப்படங்கள் வெளியாகின்றன. இவ்வாறு மறுபடியும் வெளியானாலும் படங்களிற்கான வரவேற்ப்பு சற்றும் குறையவில்லை என்பது உண்மையே. அந்த வரிசையில் ஜனவரி 10, பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் முதலில் நடித்த படம் வெளியாக உள்ளது.
க்ரஷ் மெட்டீரியல் ஹிர்த்திக்
இந்தி நடிகராக இருந்த போதிலும் இந்தியா முழுவதிலும் மிகவும் பிரபலமான நடிகர் என்றால் அது இவர் தான். இவர் நடித்த ஒரு சில படங்கள் இந்தியாவின் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இவர் நடித்த தூம் மற்றும் க்ரிஷ் ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களாகும். உலக அளவிலும் ஹிர்த்திக்கிற்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் அதிகமாக பெண்களை கவர்ந்த நடிகராகவும் இருந்து வருகிறார்.
ஹிருத்திக் ரோஷனின் முதல் படம்
பாலிவுட்டில் வெளியான இவரது முதல் படம் தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹிருத்திக் ரோஷனின் 50-வது பிறந்த நாள் ஜனவரி 10-ம் தேதி வருகிறது. இந்நிலையில் அவரது காதல் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 2000 ஆம் ஆண்டில் வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் பல சாதனைகளைப் புரிந்துள்ளது.
முதல் படத்திலேயே வெற்றி
நடிகர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தான் முதல் படமே வெற்றிப் படமாக அமையும். அதில் இவரும் குறிப்பிடத்தக்கவர். 'கஹோ நா... 'பியார் ஹை." என்ற படமே இவரது முதல் படமாகும். ஆனால் அதே 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமீர்கான் மற்றும் ட்விங்கிள் கண்ணா நடிப்பில் வெளியான படம் ‘மேளா’ பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்தது. இருப்பினும் இப்படம் மக்களை கவரத் தவறிவிட்டது. பின்னர் ஒரு வாரம் கழித்து, ஹிருத்திக் ரோஷன் மற்றும் அமீஷா படேலின் 'கஹோ நா... 'பியார் ஹை' வெளியானது. இந்த படம் அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவை பெற்றது. படம் வந்தவுடன் திரையரங்குகளில் வந்தது.
முதலிள் 1998 ஆம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது, ஹிருத்திக் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கரீனா படத்தின் 10% படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். ஆனால், படத்தின் இயக்குநர் ராகேஷ் ரோஷனுக்கும், கரீனா கபூரின் தாயார் பபிதாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் படப்பிடிப்பு நின்றது. இந்நிலையில் கரீனா படத்திலிருந்து நீக்கப்பட்டு அமீஷா படேல் படத்தில் நுழைந்தார்.
லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
ஊடக அறிக்கையின்படி, இப்படம் மொத்தம் 92 விருதுகளை வென்றது. இந்நிலையில், அதிக விருதுகளை வென்றதால், 'கஹோ நா... 'பியார் ஹை' கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 2002 ஆம் ஆண்டு பதிப்பில் இடம் பெற்றது. அத்துடன், இப்படம் 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' (2003) சாதனையிலும் இடம்பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ .276.87 கோடியை ஈட்டியது.
டாபிக்ஸ்