Pushpa 2 Release: ஈகோ சண்டை..! தாடியை ட்ரிம் செய்து வெளிநாடு பறந்த அல்லு அர்ஜுன் - புஷ்பா 2 ரிலீஸில் எழுந்த சிக்கல்
இயக்குநர் சுகுமார் உடந் ஏற்பட்ட ஈகோ சண்டை காரணமாக தாடியை ட்ரிம் செய்து வெளிநாடு பறந்துள்ளாராம் அல்லு அர்ஜுன். இதனால் புஷ்பா 2 ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக புஷ்பா 2 இருந்து வருகிறது. புஷ்பா முதல் பாகம் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்ப்பால் புஷ்பா 2 படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்த படம் ஆகஸ்ட் 15 திரைக்கு வருவதாக இருந்த நிலையில், தறப்போது டிசம்பருக்கு தள்ளிபோயுள்ளது. இதற்கு காரணமாக படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் இடையே நிலவி வந்த மோதல் தான் என தகவல்கள் வெளயாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஈகோ சண்டை
முன்னதாக, படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை எனவும் முக்கிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்னை காரணமாக தாமதமாகியுள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தன. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் சுகுமார் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஈகோ சண்டை காரணமாக படம் தாதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.