Suchitra issue: சுத்தி விட்ட சுசித்ரா.. ‘பட்டியலின சமூகத்த அப்படி ஆபாசமா’- கார்த்திக் மீது பாய்ந்த புகார்
Suchitra issue: சமூகவலைதளங்களில் சுசித்ரா என்ற நடிகையை ஆபாசமாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால், திட்டினார். குறிப்பாக பட்டியலின சமூகத்தின் பெயரையும் குறிப்பிட்டு, இழிவாக பேசி இருக்கிறார். -கார்த்திக் மீது பாய்ந்த புகார்
Suchitra issue: பட்டியலின சமூகம் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமாரின் ஆடியோ ஒன்று வைரல் ஆன நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்.
சுசித்ரா விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் புகார்
அந்த புகாரில், “ நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறேன். இந்த புகார் என்னால் பொதுநலமான வழங்கப்படுகிறது. கடந்த 15/5/2024 அன்று கார்த்திக் குமார் என்ற நடிகர் சமூகவலைதளங்களில் சுசித்ரா என்ற நடிகையை ஆபாசமாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால், திட்டினார். குறிப்பாக பட்டியலின சமூகத்தின் பெயரையும் குறிப்பிட்டு, இழிவாக பேசி இருக்கிறார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இவர்களின் தனிப்பட்ட ஆபாச பிரச்சினைகளுக்காக ஒரு சமூகத்தை இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே, அமைதியாக அனைத்து சாதியினரும் ஒன்றாக சகோதரர்களாக, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில், சாதி கலவரத்தை தூண்டியதற்காகவும், ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதற்கும் இவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
என்னதான் பிரச்சினை
முன்னதாக, பிரபல பாடகியான சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமார் குறித்து சில கருத்துக்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார். குறிப்பாக, அந்த பேட்டியில் அவர் கார்த்தி ஒரு ஓரினச்சேரிக்கையாளர் என்று பேசி இருந்தார்.இந்த பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதற்கு ரிப்ளை கொடுக்கும் விதமாக சுசித்ராவிடம், கார்த்திக் பேசியதாக சொல்லி ஆடியோ ஒன்று வைரல் ஆனது.
அந்த ஆடியோவில், கார்த்திக் "நீ மிகவும் அசிங்கமாக பேசுகிறாய், இது படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுவது போல நீ பேசுகிறாய். நீ ஏன் இப்படி பேசுகிறாய். உன் வளர்ப்பு அப்படியில்லையே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதானே. நீ நல்ல ஆச்சாரமான பிராமின் குடும்பத்துல இருந்துதானே வந்த” என்று பேசியது போல இருந்தது.
‘மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’
இந்த ஆடியோ வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் “ நான் அப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை” என்று தெரிவித்து இருந்தார். தொடர்ந்து அந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார்.
அதில் அது தன்னுடைய குரல் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு, தன்னிடம் சுசித்ரா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று கூறி, தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
அதில் சுசித்ரா பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளதாவும், அதனை உறுதிபடுத்தாமல் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளதாகவும், ஆகையால் அதனை சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்