காத்து வாங்கும் வாத்தியார்.. திணறும் விடுதலை 2 வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காத்து வாங்கும் வாத்தியார்.. திணறும் விடுதலை 2 வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

காத்து வாங்கும் வாத்தியார்.. திணறும் விடுதலை 2 வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

Malavica Natarajan HT Tamil
Published Jan 04, 2025 07:41 AM IST

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 படம் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கடந்த சில நாட்களாக வசூலில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

காத்து வாங்கும் வாத்தியார்.. திணறும் விடுதலை 2 வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?
காத்து வாங்கும் வாத்தியார்.. திணறும் விடுதலை 2 வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

இருப்பினும், பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை, படம் மந்தமாக இருப்பதாகத் தெரிய வருகிறது. படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் வசூலைக் குவிக்கவில்லை எனத் தெரிகிறது.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிடும் டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படம் வெளியான முதல் நாளில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ .7 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழில் ரூ.6.6 கோடியும், தெலுங்கில் ரூ.40 லட்சமும் வசூலித்ததாக தெரிகிறது. வார இறுதி நாட்களில் படத்தைக் காண மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் வார நாட்களில் வசூல் குறையுமோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில் விடுதலை திரைப்படம் வெளியாகி 14ம் நாளான நேற்று, தமிழ்நாட்டில் மட்டும் 44 லட்ச ரூபாய் வசூலித்து மொத்தமாக 36.33 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிகிறது. இதையடுத்து படம் வெளியான முதல் நாளில் இருந்து தற்போது வரை இந்திய அளவில் 44.8 கோடி ரூபாய் வசூலித்ததாகத் தெரிகிறது. உலகம் முழுவதும் சுமார் 55 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய படங்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், விடுதலை 2 படம் ஆரம்பத்தில் நல்ல வசூலைப் பெற்றது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அதன் வசூல் குறைந்துகொண்டே வருகிறது.

விடுதலை 2 விமர்சனம்

விடுதலை பாகம் 1 மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது. படம் வெளியான முதல் நாளில், படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க சில காட்சிகளை நீக்கி இருக்கலாம்.

படத்தில் பல இடங்களில் வரும் வசனங்கள் நீளமாக இருக்கிறது. இது படத்தை தொய்வாக்குகிறது என பலரும் கூறி வந்தனர். இன்னும் சிலர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அரசியல் படமாக இது இருக்கும்.

இந்தப் படத்தில் நடித்ததற்காக நிச்சயம் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். அப்படி தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் அது அந்த விருதுக்கு தான் அசிங்கம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்

எல்ரெட் குமார், வெற்றிமாறன் தயாரிப்பில் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் விடுதலை 2. வெற்றிமாறன் ஒரு பிரிவினைவாத குழுவின் தலைவருடன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார்

ஸ்கோர் செய்த நடிகர்கள்

மேலும் இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், அனுராக் காஷ்யப், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, தமிழ், சேத்தன், ஆர்யன், மூணார், ரமேஷ், பாவெல் நவகீதன், சர்தார் சத்யா, கென் கருணாஸ் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.