அண்ணா சீரியல் ஜூன் 3 எபிசோட்: வாயை விட்டு வம்பில் மாட்டிய சௌந்தரபாண்டி.. சண்முகத்தின் கோபத்தால் என்ன நடக்க போகிறது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஜூன் 3 எபிசோட்: வாயை விட்டு வம்பில் மாட்டிய சௌந்தரபாண்டி.. சண்முகத்தின் கோபத்தால் என்ன நடக்க போகிறது?

அண்ணா சீரியல் ஜூன் 3 எபிசோட்: வாயை விட்டு வம்பில் மாட்டிய சௌந்தரபாண்டி.. சண்முகத்தின் கோபத்தால் என்ன நடக்க போகிறது?

Aarthi Balaji HT Tamil
Published Jun 03, 2025 05:12 PM IST

அண்ணா சீரியல் ஜூன் 3 எபிசோட்: கனியை ஸ்கூலில் விட்டு சண்முகம் கிளம்பிய பிறகு ரவுடிகள் அவளை கடத்த திட்டமிடுகின்றனர். மறுபக்கம் வைகுண்டத்தை பார்ப்பதற்காக இசக்கி, பாக்கியம் என எல்லோரும் சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர்.

அண்ணா சீரியல் மே 29 எபிசோட்: சண்முகத்தால் நடந்த மரணம்.. உடையும் பிளாஷ்பேக் ரகசியம், நடந்தது என்ன?
அண்ணா சீரியல் மே 29 எபிசோட்: சண்முகத்தால் நடந்த மரணம்.. உடையும் பிளாஷ்பேக் ரகசியம், நடந்தது என்ன?

அதாவது கனியை ஸ்கூலில் விட்டு சண்முகம் கிளம்பிய பிறகு ரவுடிகள் அவளை கடத்த திட்டமிடுகின்றனர். மறுபக்கம் வைகுண்டத்தை பார்ப்பதற்காக இசக்கி, பாக்கியம் என எல்லோரும் சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர்.

இசக்கி மற்றும் பாக்கியம் என இருவரும் சூடாமணி தான் உன் உயிரை காப்பாற்றி இருக்காங்க என்று சொல்லி கண்கலங்கி பேசிக் கொள்கின்றனர். சண்முகம் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் விஷயம் அறியும் சௌந்தரபாண்டி இதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் சண்முகம் பையன் நம்பள ஏதாவது பண்ண வாய்ப்பிருக்கு, அதுக்குள்ள நாம ஏதாவது செய்யணும் என யோசிக்கிறார்.

அடுத்ததாக சண்முகம் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து எதுக்காக இப்படி பண்ண என்று கேட்க அவன் எனக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, எனக்கு எதுவும் தெரியாது என நடிக்கிறான். அவனது பெற்றோர் எங்க பையன் உங்க பக்கமே வரது கிடையாது, அவனை விட்டுடுங்க என பேசுகின்றனர். சண்முகம் இதுல உனக்கு தொடர்பு இருக்குன்னு மட்டும் தெரிய வந்துச்சு உன் அப்பா அம்மாவ உசுரோட விடமாட்டேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

அடுத்ததாக வைகுண்டம் பாண்டியம்மாவிடம் இப்படி சுலபமா ஒரு விஷயம் செய்யலாம்னு தெரிஞ்சிருந்தா நாமளே நாலு ஐந்து பேரை ரெடி பண்ணி வைகுண்டத்தை போட்டுத் தள்ளி இருக்கலாம் என்று சொல்ல வெட்டுக்கிளி இதைக் கேட்டு விடுகிறான். நீதான் இதுக்கெல்லாம் காரணம் இது அண்ணன் கிட்ட சொல்றேன் என்று சண்முகத்திடம் சொல்வதற்கு கிளம்புகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.