தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Here What Actor Rajinikanth Had To Say About Lal Salaam Audio Launch

Rajinikanth : ரொம்ப கஷ்டமா இருக்கு.. காக்கா-கழுகு கதை விஜய்யை விமர்சித்து கூறப்பட்டதல்ல - ரஜினி!

Divya Sekar HT Tamil
Jan 27, 2024 09:03 AM IST

Lal Salaam Audio Launch: "இந்த காக்கா, கழுகு பற்றி பேசுவதை இப்போதே விட்டு விடுங்கள். என் படத்திற்கு நான் தான் போட்டி. விஜய் படத்திற்கு அவர் தான் போட்டி. எனவே காக்க கழுகை வைத்து பேசுவதை இன்றே விட்டுவிடுங்கள் என ரஜினி கூறியுள்ளார்.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி

ட்ரெண்டிங் செய்திகள்

லால் சலாம் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த திரைப்படம் முதன்மையாக கிரிக்கெட் மற்றும் கம்யூனிசத்தை பற்றி பேசுகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி கூறியது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது . "என்னோட நண்பர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவாதாரிணி அகால மரணமடைந்திருக்காங்க. என்னோட ஆழ்ந்த இரங்கல்கள். அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த். கலைஞர், ஜெயலலிதா இருக்கும்போதே எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். 

சிவப்புக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவாங்க. வன்முறைக்கும் பயன்படுத்துவாங்க, புரட்சிக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்துருக்காங்க. இந்தக் கதைக்கு தேசிய விருது கிடைக்கும்னு என் மகள் சொன்னாங்க.

அதுக்குப் பிறகு விருதுக்காக நான் கேட்கமாட்டேன்னு சொல்லிட்டேன். அதன் பிறகு இது உண்மை கதை சொன்னாங்க. அப்புறம் அந்தக் கதையை கேட்டேன். `ரஜினிகாந்த்தே இந்தப் படத்தைத் தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார்னு நிறைய பேர் பேசிகிட்டாங்க.' பாபா படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லன்னு நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாகிட்ட, நானே அந்தக் கதாபாத்திரம் பண்றேன்னு சொன்னேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் ரொம்ப முக்கியம். நண்பனுக்கும் எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது” என பேசினார்.

மேலும் பேசிய அவர், காக்கா - கழுகு என்ற ஒரு கதையை மேடையில் பேசியிருந்தார். அதாவது ”கழுகு உயர பறந்து கொண்டிருக்கும் அதை பார்த்து காக்காவும் பறக்க நினைக்கும். ஆனால் ஒருபோதும் காக்கா கழுகாக மாற முடியாது என்ற கதையை சொல்லியிருந்தார்”.

விஜய்யை தான் ரஜினி காக்கா என்று கூறியுள்ளார் என்று சமூக வலைத்தளங்கள் முழுவதும் பரவலாக பேசப்பட்டன. மேலும் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசியிருந்த விஜய், கழுகு என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

"காக்கா - கழுகு கதையை விஜய்யை தாக்கி பேசியதாக பலரும் தவறாக நினைத்துக் கொண்டார்கள். அது என்னை ரொம்பவே வேதனையடைய செய்தது. நான் எப்போதுமே அவரின் நலம் விரும்பிதான்.

விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் அப்போ விஜய்க்கு 14 வயசிருக்கும். ஷூட்டிங் பார்த்துட்டிருந்தாங்க. ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார். என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. நீங்க சொல்லுங்க, படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்ன்னு என்றார். அப்ப விஜய்யிடம் நல்லா படிப்பா. அதுக்கப்புறம் நடிகர் ஆகலாம்னு சொன்னேன்.

அதுக்கப்பறம் விஜய் நடிகர் ஆகி, படிப்படியா அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார். அடுத்து அரசியல், சமூகசேவைனு போக இருக்கார். இதுல வந்துட்டு எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. என் படத்திற்கு நான் தான் போட்டி. விஜய்-ன் படத்திற்கு அவர் தான் போட்டி. எனவே காக்க கழுகை வைத்து பேசுவதை இன்றே விட்டுவிடுங்கள்" என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.