கண்ணதாசன் செய்த விஷயம்.. சந்தோஷத்தில் கே.பாலசந்தர்.. வரவு எட்டணா செலவு பத்தணா பாடல் உருவான கதை!
பாமா விஜயம் படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் உருவான கதை குறித்து இதில் பார்க்கலாம்.

மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகி தமிழில் சிறந்த கிளாசிக் காமெடி படமாக இருந்து வருகிறது பாமா விஜயம் திரைப்படம். டி.எஸ். பாலையா, மேஜர் சுந்தர் ராஜன், முத்துராமன், நாகேஷ், செளகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, ராஜஸ்ரீ, ஸ்ரீகாந்த், சச்சு என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள்.
ப்ரேமுக்கு பிரேம் சிரிப்பலை வரவழைக்கும்
விருந்தாளியாக கூட்டு குடும்பம் ஒன்றில் நுழையும் சினிமா கதாநாயகியால் ஏற்படும் களேபரங்களும், குழப்பங்களும் தான் படத்தின் ஒன்லைன். மற்றவர்களின் பகட்டான வாழ்க்கையையும், சினிமா நடிகர், நடிகைகள் மீது கொண்ட மோகத்தால் பெறும் அவதிகளையும், குடும்பம் துன்பியல் படுவதையும் ப்ரேமுக்கு பிரேம் சிரிப்பலை வரவழைக்கும் விதமான திரைக்கதை, வசனத்துடன் உருவாக்கியிருப்பார்.
சீரியஸ் ஆன வேடங்களிலும், வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் பார்த்து பழகிய மேஜர் சுந்தர் ராஜன் இந்த படத்தில் இந்தி பண்டிட்டாக முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி சிரிக்க வைத்திருப்பார். கூட்டு குடும்பத்தில் நிலவி வரும் அமைதி, சந்தோஷம், பாசம் போன்றவை பகட்டு, வேண்டாத ஆசையால் என்னவெல்லாம் ஆகிறது என்பதை காமெடியுடன் எதார்த்தமாக காட்டிய படம் பாமா விஜயம்.
வரவு எட்டணா செலவு பத்தணா பாடல்
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட். முக்கியமாக இப்படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் உருவான கதை குறித்து இதில் பார்க்கலாம்.
பாடல் உருவான கதை
கே பாலச்சந்தர் கதையை சொல்ல தொடங்குகிறார். அதில், பாமா என்ற பெயரில் ஒரு சினிமா நடிகை வசித்து வருகிறார். அவர் வீட்டிற்கு அனைவரையும் அழைக்கிறார். அப்பொழுது தன் வீட்டை பந்தாவாக காட்டிக் கொள்ள நிறைய கடன் வாங்கி வைர நகைகள் வாங்கி போட்டுக் கொள்கிறார். மிகவும் ஆடம்பரமாக செலவு செய்கிறார்.
இதை வைத்து தான் நீங்கள் ஒரு பாடல் எழுத வேண்டும் என கண்ணதாசனிடம் கூறுகிறார் கே பாலச்சந்தர். அவ்வளவு தானே ஒரு நிமிடத்தில் நான் பாடலை எழுதுகிறேன் எனக்கூறி வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா துந்தனா என பாடல்களை எழுதி கே பாலச்சந்தர் இடம் கொடுக்கிறார்.
இதைக்கேட்ட பாலச்சந்தருக்கு மிகவும் சந்தோஷம். தான் நினைத்தது போலவே அந்த கதைக்கு ஏற்றவாறே பாடல் அமைந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் கே பாலச்சந்தர். அவர் நினைத்தது போலவே இப்பாடலும் செம ஹிட் அடித்தது. இப்பாடல் உருவானது இப்படித்தான்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்