தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Here We Will See The Actresses Who Left Cinema After Acting With Actor Ajith Kumar

Ajith: அஜித் நடிகைகள்.. இப்ப இவங்க எல்லாம் எங்க போனாங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 14, 2024 01:20 PM IST

நடிகர் அஜித்குமாருடன் நடித்து சினிமாவை விட்டு விலகிச் சென்ற நடிகைகள் குறித்து இங்கே காண்போம்.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

உண்மையில் கூற வேண்டும் என்றால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் எதிரியாக பார்த்துக் கொண்டார்கள். அந்த அளவிற்கு இந்த ரசிகர்கள் அந்த இரண்டு நடிகர்களையும் உச்சத்தில் வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த இரண்டு ரசிகர்கள் கூட்டமும் நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் என இரண்டு பிரிவாகப் பிரிந்தனர்.

இந்த கூட்டம் அப்படியே தற்போது உச்ச நடிகர்களாக இருக்கக்கூடிய விஜய் மற்றும் அஜித் குமாரை பின் தொடர்ந்து வருகிறது. இரண்டு நடிகர்களுமே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர்கள்.

தற்போது நடிகர் அஜித் பெரிய அளவில் திரைப்படங்கள் எதுவும் கொடுப்பது கிடையாது. ஆனால் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அவர் தன் வசம் வைத்திருக்கின்றார். வளரும் காலத்திலிருந்து நடிகர் அஜித் குமார் எத்தனையோ புதுமுகநாயகிகள் நடித்துள்ளனர்.

சில நடிகைகள் இன்று வரை சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் நடிகர் அஜித்குமாருக்கு வெற்றி கொடுத்த திரைப்படங்களின் நடித்த நடிகைகள் பலரும் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அந்த வகையில் அஜித்குமார் ஒரு நடித்து தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் போன சில நடிகைகளை இங்கே காண்போம்.

நடிகை மானு

 

 

காதல் மன்னன் திரைப்படத்தில் நடிகர் அஜித்தோடு இணைந்து நடித்தவர் மானு. அந்த திரைப்படத்திற்கு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அஜித் திரை வாழ்க்கையில் காதல் மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாகும் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் அவர் மிகப்பெரிய பிரபலமாக மாறினார். அந்த நடிகையையும் யாராலும் அவ்வளவு விரைவில் மறந்து விட முடியாது. அதற்குப் பிறகு மானு தமிழ் சினிமாவில் வளம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அது நடக்கவில்லை.

நடிகை கனிகா

 

வரலாறு திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஓடு இவர் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படம் வந்த காலகட்டத்தில் ஒரு சில படங்களில் அவ்வப்போது நடித்து வந்தாலும் தற்போது வெள்ளி திரையை விட்டு சற்று ஒதுங்கி இருக்கிறார். தற்போது சின்ன தறையில் கவனம் செலுத்தி சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை வசுந்தரா தாஸ்

சிட்டிசன் திரைப்படம் நடிகர் அஜித்குமாருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது இந்த திரைப்படத்தில் நடித்தவர் பாடகி மற்றும் கதாநாயகி வசுந்தரா தாஸ். இவர் இதற்கு முன்னரே ஹே ராம் திரைப்படத்தில் கமலோடு இணைந்து நடித்திருக்கிறார். சிட்டிசன் திரைப்படத்திற்கு பிறகு இசை கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்.

நடிகை பிரியங்கா

 

நடிகர் அஜித் திரைப்படத்தில் ராஜா திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படத்தில் ஐயர் வீட்டு பெண்ணாக நடிகை பிரியங்கா நடித்திருப்பார். அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் அவர் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். பின்னர் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு சில படங்களில் நடித்த வருகிறார்.

நடிகை பிரியா கில்

 

அஜித் குமார் நடித்த திரைப்படங்களில் ரெட் திரைப்படத்திற்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் அஜித்குமாருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாக தொடங்கியது. இது திரைப்படத்தில் நாயகியாக நடித்த பிரியா கில் அதற்குப் பிறகு எங்கு சென்றார் என்பது கூட தெரியவில்லை. வேறு மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதற்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.