புது வருடத்தில் ஓடிடிக்கு வரும் சூப்பர் ஹிட் படங்கள்.. லிஸ்டில் டாப் 5 இடம் பிடித்த படங்கள் என்ன தெரியுமா?
2024ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் சில ஜனவரி முதல் வாரத்திலேயே ஓடிடியில் வெளியாக உள்ளனன. அதில் டாப் 5 பிடித்த படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
2024ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் 2025 ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் நுழைய உள்ள நிவையில் புது வருடத்தின் தொடக்கத்திலேயே சில படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வரிசையாக ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில், ஜனவரி மாதத்தின் தொடக்க வாரத்தில் ஓடிடியில் வரவிருக்கும் டாப் 5 படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஆல் வீ இமேஜின் அஸ் லைட்
ஆல் வீ இமேஜின் அஸ் லைட் என்ற படம் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாக ஆல் வி இமேஜின் அஸ் லைட் படத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி, பெரும்பாலான மக்களால் பாராட்டப்பட்ட படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட், இறுதியாக ஓடிடியில் வருகிறது.
இப்படம் இறுதியாக ஜனவரி 3 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. இந்தப் படத்தில் திவ்யா பிரபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார். ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம் இரண்டு செவிலியர்களின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கிறது.
புஷ்பா 2: தி ரூல்
ஐகான் நட்சத்திரம் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: தி ரூல் ஜனவரி மாதம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த அதிரடி திரைப்படம், ஏற்கனவே ரூ .1,600 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 56 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், தியேட்டரில் மக்களின் கூட்டம் தொடர்ந்து காணப்பட்டால் அதன் ஓடிடி ரிலீஸ் தாமதமாக வாய்ப்புள்ளது.
விடுதலை 2
தமிழில் நடிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை 2' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 10 நாட்களே ஆன நிலையில் விடுதலை 2 படம் ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஜீ 5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் த்ரில்லர் படமான இது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
யுஐ
கன்னட நடிகர் உபேந்திராவின் நடிப்பில் உருவான திரைப்படம் யுஐ. இந்தப் படம் வெளியான நாள் முதலே மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்த நிலையில், இந்தப் படம் தற்போது ஜனவரி மாதத்தில் ஓடிடிக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அறிவியல் புனைகதையை அடிப்படையாகக் கொண்டு உருவான யுஐ படம் டிசம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது.
யுஐ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை சன் நெக்ஸ்ட் ஓடிடி கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெளிவாக இல்லை. இருப்பினும் இப்படம் ஜனவரி மாதத்திலேயே ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யுஐ படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வருமா அல்லது இது வேறு தளத்தில் வெளியிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பன்னி
மலையாள அதிரடி திரில்லர் படமான 'பன்னி' ஜனவரி மாதத்திலேயே சோனி எல்ஐவி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்த இது இந்த ஆண்டு அக்டோபரில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ளார்.
டாபிக்ஸ்