Divya Kallachi: கெத்தா சுத்திய திவ்யா கள்ளச்சி.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Divya Kallachi: கெத்தா சுத்திய திவ்யா கள்ளச்சி.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி என்ன?

Divya Kallachi: கெத்தா சுத்திய திவ்யா கள்ளச்சி.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி என்ன?

Malavica Natarajan HT Tamil
Published Jan 30, 2025 08:04 AM IST

Divya Kallachi: சிறார்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக அளித்த புகராின் அடிப்படையில் திவ்யா கள்ளச்சி, கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் பிண்ணனி என்ன என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

Divya Kallachi: கெத்தா சுத்திய திவ்யா கள்ளச்சி.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி என்ன?
Divya Kallachi: கெத்தா சுத்திய திவ்யா கள்ளச்சி.. கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி என்ன?

இப்படியானவர்கள், கொரோனா சமயத்தில் கிடைத்த ரீச் மூலம் தொடர்ந்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுக்கான நட்பு வட்டத்தை ஏற்படுத்தி கன்டென்ட் கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த வீடியோக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ரசிக்கக்கூடியவையாக தெரிந்தாலும் நாட்கள் செல்ல செல்ல ஒருவித அலுப்பையும் அவர்களது வார்த்தைகள் வெறுப்பையும் தர ஆரம்பித்தது.

கார்த்தியால் கன்டென்ட் ஆன திவ்யா

இப்படி, மேலே கூறிய வகையில், தன்னை சோசியல் மீடியா முன்பு அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் திவ்யா கள்ளச்சி. தன்னை கார்த்திக் என்ற இளைஞர் காதலித்து வந்ததாகவும், அவர் தற்போது தன்னை விட்டு சென்றதாகவும் கூறிய திவ்யா, யாராவது என் கார்த்தியை பார்த்தால் கண்டுபிடித்து தருமாறு கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டில் இந்த வீடியோவை பார்க்காத ஆளே இல்லை எனும் அளவிற்கு வீடியோ ட்ரெண்ட் ஆனது. காரணம், வீடியோ வெளியிட்ட பெண்ணின் தோற்றம், வீடியோில் குறிப்பிட்ட கார்த்திக் என்ற பெயர்.

இந்த வீடியோ வெளியான சமயத்தில் பலரும் கார்த்திக் என்ற பெயர் வைத்தவர்களை டேக் செய்து இந்த வீடியோவை பரப்பி வந்தனர். தன் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு இருந்ததை அறிந்த திவ்யா, அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகினார். இது அவருக்கு பேருடன் வருமானத்தையும் தர ஆரம்பித்ததால் இதே வேளையில் மூழ்கினார்.

பணத்துக்காக தான் எல்லாம்

பின்னாளில், காசு கிடைக்கும் என்றால் எந்த மாதிரி வேண்டுமானாலும் கன்டென்ட் கொடுப்பேன் என பகிரங்கமாகவே பேசி இருப்பார். அதற்கு சாட்சி அவரது கல்யாண வீடியோ. தனக்கு கல்யாம் ஆகிவிட்டது. குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வில்லை எனக் கூறி வந்தவர் பின்னாளில் அதனை கன்டென்ட் வீடியோ என்றார். இப்படியாக இவர், கன்டென்ட், கன்டென்ட் எனப் பேசி, பல டிக்டாக் பிரபலங்களுடனும், ரீல்ஸ் பிரபலங்களுடனும் கூட்டு சேர்ந்தார்.

பாலியல் தொழில்

இந்த சயமத்தில் தான் இவரைச் சுற்றி பல பிரச்சனைகள் வந்தபோதும், அசால்டாக அதை டீல் செய்தார். ஆனால். தற்போது அவர் தொக்காக சிக்கியிருக்கும் விஷயமே வேறு. காசுக்காக பல சோசியல் மீடியா இன்ஃபுளுயன்சர்களுடன் தொடர்பு கொண்டு, சிறார்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு சிக்கி உள்ளார்,

இந்த ஆதாரத்தை சமூக ஆர்வலரான பெண் ஒருவர் பொதுவெளியில் வெளியிட்ட பின்னர் தான் இத்தனை விஷயங்களும் வெளியில் தெரிய வருகிறது. திவ்யா கள்ளச்சி தன்னுடைய யூடியூப் வருமானத்தை ஹேக் செய்து திருடியதாகவும் அதனால் அவரை தொடர்புகொண்டு விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்ததாகவும் அப்பெண் கூறினார்.

சிறார்களை வைத்து தொழில்

அப்போது, திவ்யா கள்ளச்சி என்பவர், ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா மற்றும் சிலருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார். இதற்காக சிறார்களையும் பயன்படுத்துகிறார். இந்த தொழிலுக்காக தனியே வாட்ஸ்அப் சாட்டையும் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, திவ்யாவின் போனில் பலரது ஆபாச வீடியோக்கள் இருக்கிறது. அதற்கான ஆதராமும் என்னிடம் இருக்கிறது எனக் கூறினார். மேலும், சிறார்களை கொலை செய்யவும் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். அப்போது, அவர்கள் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் அந்தப் பெண் வெளியிட்டார்,

திவ்யா கைது

இவை அனைத்தும் தற்போது சூடு பிடித்ததால் தான், திவ்யா கள்ளச்சி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து அவரது போனை பறிமுதல் செய்தனர். இதுவரை வந்த தகவலின் படி, திவ்யாவின் போனில் பல வீடியோ, ஆடியோக்கள் டெலிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் அழரை மீட்கப்பட்டு விசாரணை நடைபெறும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் கிடைத்த உடன் தான், யார் யார் என்ன செய்தார்கள் என்பது தெரியவரும்.

அதேசமயத்தில், திவ்யா பற்றிய புகார் வெளியே வர ஆரம்பித்த உடனேயே திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா போன்றோர் தங்கள் வீடியோவை வைத்து திவ்யா மிரட்டுவதாகவும், தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை எது பொய் என்பது விரைவில் தெரிய வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.