Februry Cinema: பிப்ரவரியில் வெளியாகும் உறவுகள் பேசும் படங்கள்.. என்னென்ன படம்.. எந்தெந்த ஓடிடி! விவரங்கள் உள்ளே..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Februry Cinema: பிப்ரவரியில் வெளியாகும் உறவுகள் பேசும் படங்கள்.. என்னென்ன படம்.. எந்தெந்த ஓடிடி! விவரங்கள் உள்ளே..

Februry Cinema: பிப்ரவரியில் வெளியாகும் உறவுகள் பேசும் படங்கள்.. என்னென்ன படம்.. எந்தெந்த ஓடிடி! விவரங்கள் உள்ளே..

Malavica Natarajan HT Tamil
Published Feb 07, 2025 03:08 PM IST

Februry Cinema: பிப்ரவரி மாதத்தில் உறவுகளை மையப்படுத்தி சில படங்கள், குறும்படங்கள், வலைத் தொடர்கள் ஓடிடி தளங்களிலும் தியேட்டரிலும் வெளியாகின்றன. அதுகுறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Februry Cinema: பிப்ரவரியில் வெளியாகும் உறவுகள் பேசும் படங்கள்.. என்னென்ன படம்.. எந்தெந்த ஓடிடி! விவரங்கள் உள்ளே..
Februry Cinema: பிப்ரவரியில் வெளியாகும் உறவுகள் பேசும் படங்கள்.. என்னென்ன படம்.. எந்தெந்த ஓடிடி! விவரங்கள் உள்ளே..

டப்பா கார்டெல் - நெட்ஃபிளிக்ஸ்

போதைப்பொருள் கடத்தலை நடத்தும் நடுத்தர வர்க்கப் பெண்கள் கும்பலைப் பற்றிய நெட்ஃபிக்ஸ் குற்றத் தொடரான ​​டப்பா கார்டெல் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்படும் என்று ஸ்ட்ரீமர் வெள்ளிக்கிழமை அறிவித்தது. டப்பா கார்டலில் ஷபானா ஆஸ்மி , கஜராஜ் ராவ், ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த் மற்றும் சாய் தம்ஹங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

டப்பா கார்டெல்
டப்பா கார்டெல்

இது பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஐந்து பெண்கள், மும்பையின் தானேவில் பேராசை மற்றும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஆசையால் எப்படி போசைப் பொருள் விற்கும் நபர்களாக மாறுகின்றனர் என்பதை மையப்படுத்திய கதை.

அனுஜா - நெட்ஃபிளிக்ஸ்

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 சகோதரிகளின் கதையை மையப்படுத்திய குறும்படம் அனுஜா. பிரியங்கா சோப்ரா மற்றும் குணீத் மோங்கா ஆகியோர் தயாரித்துள்ள இந்த குறும்படம் குழந்தைத் தொழிலாளர்களின் இருண்ட பக்கத்தை பற்றி கூறுகிறது. இந்தப் படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படமாகும்.

அனுஜா
அனுஜா

இந்தப் படத்தில் நடித்துள்ள குழந்தை உண்மையாகவே குழந்தைத் தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டவர் தான். இத்தகைய சிறப்பு கொண்ட அனுஜா குறும்படம் பிப்ரவரி 5ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதனை சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு பார்த்து வருகின்றனர்.

காதல் என்பது பொது உடமை - திரையரங்குகள்

இந்தப் படம் தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய காதல் குறித்து பேசுகிறது. அவர்களின் உணர்வுகளையும் காதலையும் சமூகம் பார்க்கும் விதம் குறித்து எடுத்துரைக்கிறது. ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி 14ம் நாள் காதலர் தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

 

காதல் என்பது பொது உடமை
காதல் என்பது பொது உடமை

இது இந்தியாவில் வெளியாகும் முதல் தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் லிஜோ மோஸ் ஜோஸ், வினித், ரோகினி, அனுஷா மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்வீட் மாக்னோலியாஸ் சீசன் 4- நெட்ஃபிக்ஸ்

ஸ்வீட் மாக்னோலியாஸ் எனும் வெப் தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் பிப்ரவரி 6ம் தேதி வெளியானது. இந்தத் தொடர் மேடி, டானா சூ மற்றும் ஹெலன் என்ற 3 நண்பர்களின் உறவுகள், தொழில், மற்றும் வாழக்கை முறையை பற்றியது. இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி பேசுகிறது.

ஸ்வீட் மாக்னோலியாஸ்
ஸ்வீட் மாக்னோலியாஸ்

தி ஒயிட் லோட்டஸ் - ஜியோ சினிமா

தி ஒயிட் லோட்டஸ் தொடரின் 3வது சீசன் தாய்லாந்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலை தொடரை ஹெச்பிஓ பிப்ரவரி 16ம் தேதி வெளியிடுகிறது.

இது டார்க் காமெடி தொடராக மட்டுமல்லாது நகைச்சுவை தொடராகவும் மர்மங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.

இந்த எம்மி விருது பெற்ற தொடர் அதன் ஓவியக் கதாபாத்திரங்கள் எப்போதும் ஒரு ரகசியத்தை மறைத்து, மூச்சடைக்க வைக்கும் இடங்களையும், ஒரு மர்மமான மரணத்தையும் மறைத்து வைப்பதற்காகபிரபலமானது.

கிண்டா பிரக்ணன்ட் - நெட்ஃபிளிக்ஸ்

கிண்டா ப்ரெக்னன்ட் என்பது, 2025-ல் வெளியாகும் அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம். இதை டைலர் ஸ்பிண்டல் இயக்கியுள்ளார். ஜூலி பைவா மற்றும் ஆமி ஷுமர் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர். இந்தப் படத்தில், ஆமி ஷுமருடன் ஜிலியன் பெல், பிரையன் ஹோவி, வில் ஃபோர்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.

கிண்டா பிரக்ணன்ட்
கிண்டா பிரக்ணன்ட்

இந்தப் படம் நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடப்படும், கிறிஸ் கீரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார், ஹேப்பி மேடிசன் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இது பெண்களை மையமாகக் கொண்ட ஒரு நகைச்சுவைத் திரைப்படம். கதாநாயகி தனது கர்ப்பத்தை போலியாகக் காட்டி, தனது கனவுகளின் மனிதனைச் சந்திக்கும்போது என்ன நடக்கும்? என்பதை பற்றி பேசுகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.