மத்தவங்க எல்லாம் வந்தாங்க.. போனாங்க.. ஆனா இந்தக் காட்டுத் தீ.. புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 32 நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் படம் கோடிக் கணக்கில் தன் தினசரி வசூலை பதிவு செய்து வருகிறது.
தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை புரிந்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்து, இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 32வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 1429.5 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 32வது நாளான நேற்று சுமார் ரூ.1698 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இருப்பினும் புத்தாண்டிற்கு பின் வசூலில் குறைந்து வரும் நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வார இறுதி நாள்களில் அதிகப்படியான வசூல்களைக் குவித்து வருகிறது.
தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு
சினிமா பிரமுகர் ஒருவர்(அல்லு அர்ஜூன்) ஒரு நாள் சிறைக்குச் சென்றதற்கு, திரையுலக நபர்கள் அனைவரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றனர். என்னைத் திட்டுறாங்க. என்ன சபாநாயகர் அவர்களே, அந்த சினிமா பிரமுகருக்கு கால் போச்சா, கண் போச்சா, கை போச்சா, கிட்னி போச்சா என்ன ஆச்சு. ஒன்றும் ஆகவில்லை. ஆனால், சினிமா பிரமுகரை ஒவ்வொரு திரைப்பிரபலங்கள் சென்று விசாரிக்கின்றனர் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
விளக்கமளித்த அல்லு அர்ஜூன்
இது ஒரு விபத்து. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நிஜமாகவே அந்த ஃபேமிலிக்கு நடந்தது மிக மிக துரதிர்ஷ்டம். நான் ரொம்ப வேதனைப்படுறேன்னு சொல்றேன்.
அந்தச் சிறுவன் பற்றி ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் ஒருமுறை அப்டேட் கேட்டுட்டு இருக்கேன். அவனுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்டு இருக்கிறதா தகவல் வருகிறது. அது தான் நான் சந்தோஷப்படுற ஒரு விஷயம் என அல்லு அர்ஜூன் விளக்கமளித்துள்ளார்.
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தில் அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்