Serial TRP: அடித்து ஆடும் சின்ன மருமகள்.. ஆட்டம் காணும் சன் டிவி.. இந்த வார சீரியல் டிஆர்பி லிஸ்ட்..
Serial TRP: தமிழ் தொலைக்காட்சிகளில் மார்ச் மாதத்தின் 3ஆம் வாரத்தில் ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி புள்ளிகளின் விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Serial TRP: திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமான இல்லத்தரசிகளை ரசிகர்களாக கொண்டது டிவி சீரியல்கள்தான். ஒவ்வொரு சீரியலும் அதன் கதை, கதாபாத்திரங்களின் அமைப்பு, நடிகர்களின் நடிப்புத் திறன் ஆகியவற்றால் மட்டுமே சிறப்பு பெறுகின்றன.
ஒவ்வொரு வாரமும் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு ஓடியுள்ளது என டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகும். கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்புகளின் அடிப்படையில் டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் 10 இடங்களைப் பெற்ற சீரியல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
சிங்கப்பெண்ணே
சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியல் டிஆர்பியில் 9.42 புள்ளிகள் பெற்று டாப் 10 சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மூன்று முடிச்சு
சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சீரியலான மூன்று முடிச்சு, இந்த வாரம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இது டிஆர்பி புள்ளி வரிசையில் 9.10 புள்ளிகள் பெற்றுள்ளது.
கயல்
சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் கயல். சில மாதங்களாக டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வந்த கயல் தற்போது அதன் புள்ளிகள் எல்லாம் குறைந்து டாப் 10 பட்டியலில் 9.00 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்துள்ளது.
மருமகள்
சன் டிவியில், இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் மருமகள். இந்த மருமகள் சீரியல் டிஆர்பியில் 8.05 புள்ளிகளைப் பெற்று டிஆர்பி பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
சின்ன மருமகள்
விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சின்ன மருமகள். இந்த சீரியல் இத்தனை நாட்களாக முதல் 10 இடங்களுக்குள் அதிகம் இடம் பிடிக்காமல் இருந்த நிலையில், தற்போது 7.81 புள்ளிகளை பெற்று டிஆர்பி பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. டாப் 10 சீரியல்களின் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்து வந்த இந்த சீரியல் தற்போது 7.70 டிஆர்பி புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது
அன்னம்
சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் அன்னம். இந்த சீரியல் 7.01 புள்ளிகளுடன் டிஆர்பியில் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. இது தற்போதுள்ள விறுவிறுப்பான கதைக்களத்தால் டிஆர்பியில் 6.88 புள்ளிகள் பெற்று 8ம் இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் ஆகும். இது வெளியான நாளில் இருந்தே அதிக பார்வையாளர்களைப் பெற்று டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த சீரியல் தற்போது 6.80 புள்ளிகள் பெற்று 9ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை சீரியல் டிஆர்பியில் 6.04 புள்ளிகள் பெற்று 10வது இடத்தை பிடித்து புள்ளி பட்டியில் பின்தங்கி உள்ளது.

டாபிக்ஸ்