Top 10 Serials: மக்கள் மனதை வென்ற சீரியல்கள் எது? டி.ஆர்.பியோடு டாப் 10 லிஸ்ட் ரெடி!
Top 10 Serials: இந்த வாரம் வெளியான தமிழ் சீரியல்களில் மக்கள் அதிகம் விரும்பிய சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

Top 10 Serials: திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமான இல்லத்தரசிகளை ரசிகர்களாக கொண்டது டிவி சீரியல்கள்தான். ஒவ்வொரு சீரியலும் அதன் கதை, கதாபாத்திரங்களின் அமைப்பு, நடிகர்களின் நடிப்புத் திறன் ஆகியவற்றால் மட்டுமே சிறப்பு பெறுகின்றன.
இவை அனைத்தும் சரியாக இருந்து ஒரு நேர்த்தியான படைப்பாக இருந்தால் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தமிழ் சீயல்களுக்கான சேனல்களை பொறுத்த வரை, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகிய சேனல்கள் முன்னணி வகிக்கின்றன. இதில் ஓடும் பிரைம் டைம் சீரியல்களே அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.
சீரியல் டிஆர்பி
ஒவ்வொரு வாரமும் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு ஓடியுள்ளது என டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகும். கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்புகளின் அடிப்படையில் டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் 10 இடங்களைப் பெற்ற சீரியல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
1. சிங்கப்பெண்ணே
சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியல் டிஆர்பியில் 10.60 புள்ளிகள் பெற்று டாப் 10 சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மூன்று முடிச்சு
சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சீரியலான மூன்று முடிச்சு, டாப் 10 டிஆர்பி பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளது. இது 10.25 புள்ளிகள் பெற்றுள்ளது.
கயல்
சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் கயல். சில மாதங்களாக டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வந்த கயல் தற்போது அதன் புள்ளிகள் எல்லாம் குறைந்து டாப் 10 பட்டியலில் 9.91 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்துள்ளது.
மருமகள்
சன் டிவியில், இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் மருமகள். இந்த மருமகள் சீரியல் டிஆர்பியில் 8.96 புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்தில் உள்ளது.
அன்னம்
சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் அன்னம். புதிதாக தொடங்கப்பட்ட இந்த சீரியல் 8.75 புள்ளிகளுடன் டிஆர்பியில் 5ம் இடத்தை பெற்றுள்ளது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் 8.56 டிஆர்பி புள்ளிகள் பெற்று டாப் 10 பட்டியலில் 6ம் இடம் பிடித்துள்ளது.
ராமாயணம்
சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ராமாயணம் சீரியல் டிஆர்பியில் 8.45 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தைப் பெற்றுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் இரவு 89 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் ஆகும். இது புதிதாக தொடங்கப்பட்டாலும் டிஆர்பியில் 7.59 புள்ளிகள் பெற்று 8ம் இடத்தில் உள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. இது டிஆர்பியில் 6.90 புள்ளிகள் பெற்று 9ம் இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை சீரியல் தான் டிஆர்பி பட்டியலில் 10ம் இடத்தை பெற்றுள்ளது. இது 6.81 புள்ளிகளை பெற்றுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்