Fire Movie Review: மக்கள் மனதில் பற்றியதா ஃபயர்? என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்.. எக்ஸ் தள விமர்சனம் இதோ..
Fire Movie Review: காதலர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வெளியான ஃபயர் படத்தை பார்த்த மக்கள் எக்ஸ் தளத்தில் என்ன பேசியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

Fire Movie Review: தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் எடுத்த படம் தான் ஃபயர் என திரைப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கேவும் படத்தின் நடிகர்களும் கூறி வந்தனர்.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான ஃபயர் படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
பணம் பத்தும் செய்யும்..
ஃபயர் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்த ஒருவர் பணம் பத்தும் செய்யும் என கருத்து தெரிவித்தார். அத்துடன் நான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் இது எனக் கூறியுள்ளார்.
சொல்லிக்குற அளவு கன்டென்ட் இல்ல
மற்றொரு எக்ஸ் தள பயனாளி கூறுகையில், இந்தப் படத்தை வெறும் காமத்தை மட்டும் வைத்து எடுத்திருக்கிறார்கள். சொல்லிக் கொள்ளும் படியாக படத்தில் கன்டென்ட் எதுவும் இல்லை என்றும் இதுபோன்ற படங்கள் எல்லாம் வராமல் இருந்தால் நல்லது என்றும் கூறியுள்ளார். அத்துடன் படத்திற்கு 5/1 என்ற ரேட்டிங்கையும் கொடுத்துள்ளார்.
தாய்மார்கள் பார்க்க வேண்டும்
இன்னொருவர், படம் பெண்களுக்கான விழிப்புணர்வு படம் என சொல்கிறார்கள். ஆனால், பெரும்பாலான தியேட்டர்களில் இரவுக் காட்சி தான் உள்ளது. இப்படி இருந்தால் எப்படி குடும்ப ரசிகர்களால் படம் பார்க்க முடியும். எனவே படக்குழு மகளிர் குறிப்பாக தாய்மார்கள் இந்த படத்தை பார்க்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ரக்ஷிதாவா இது?
ஒருவர், ஃபயர் படத்தில் நடித்த நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியை விமர்சித்து பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளர். சரவணன் மீனாட்சி சீரியலில் குடும்ப பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துவிட்டு இப்போது இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சித்தார்.
அதற்கு பதிலளித்த மற்றொருவர், ஒவ்வொரு குடும்பப் பெண்ணிலும், ஒரு கவர்ச்சியான பக்கம் வெளிக்கொணரப்பட வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு நாம் முன்னேறலாம். அத்துடன் ஏன் ரக்ஷிதா மட்டும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாலா ஏன் இந்த விமர்சனத்தை ஏற்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
இது நல்ல படைப்பு
இன்னொருவர், ஃபயர் முழு படமும் பெண்கள் பாதுகாப்பு என்ற தீவிரமான கருப்பொருளைக் கையாள்கிறது. முதல் பாதி சுவாரஸ்யமாகவும், இனவெறியுடனும் உள்ளது. இரண்டாம் பாதி பிசியோதெரபிஸ்ட்-பெண் வாடிக்கையாளர்கள் பிரச்சினையின் கடுமையான உண்மையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
முன்னணி நடிகர்களின் நல்ல படைப்பு இது. முதிர்ந்த பார்வையாளர்களுக்காக இதை முயற்சித்துப் பாருங்கள் எனக் கூறி படத்திற்கு 3/5 எனும் ரேட்டிங் கொடுத்துள்ளார்.
ஃபயர் படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ் ஃபயர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காசி என்பவர் பெண்களுக்கு எதிராக செயல்களை மையப்படுத்திய உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே எஸ் கே இயக்குநராகியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்