Chhi Chhi Chhi Re Nani : ‘ஆடுறீங்க.. பாடுறீங்க.. கொண்டாடுறீங்க’ இந்த பாடலின் வரிகள் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போவீங்க!
Chhi Chhi Chhi Re Nani : 80களில் தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த ஒரு கன்டண்ட் என்றாலும், இந்த பாடலின் சூழலும், அதில் நடித்தவர்களின் பாவனையும், பாடலின் புரியாத வரிகளும் தான் 2K கிட்ஸ்களை கொண்டாட வைத்துள்ளது. சரி, உண்மையில் இந்த பாடலின் வரிகள் தான் என்ன?

Chhi Chhi Chhi Re Nani என்கிற ஒடியா பாடல் தான், இப்போது எல்லா சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்திருக்கிறது. இதில் கூடுதல் விசேசம் என்னவென்றால், இன்று ரீலிஸ் போட்டு, அந்த பாடலை கொண்டாடிக் கொண்டிருக்கும் பலருக்கும், அந்த பாடலின் வரிகளின் அர்த்தம் தெரியவில்லை. காதலில் தோல்வி அடைந்த ஒரு இளைஞனின் வலியை உணர்த்தும் பாடல் என்பது தான் அனைவரும் புரிந்த ஒரே விசயம்.
80களில் தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த ஒரு கன்டண்ட் என்றாலும், இந்த பாடலின் சூழலும், அதில் நடித்தவர்களின் பாவனையும், பாடலின் புரியாத வரிகளும் தான் 2K கிட்ஸ்களை கொண்டாட வைத்துள்ளது. சரி, உண்மையில் இந்த பாடலின் வரிகள் தான் என்ன? தேடிப்பிடித்து ஒருவழியாக, அதை உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் புரிந்து கொண்டது சரி தான், காதலின் வலி தான், இந்த வரிகள். இதோ ‘நானிக்கு அவசரம்’ என்ற பொருள் படும் அந்த பாடலின் வரிகள்:
‘ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன சுகங்களை கொடுக்க முயற்சித்தேன்
நாங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்வித்து மகிழ்வித்தோம்
உங்க அம்மாவிடம் கல்யாணம் பண்ணிக்கறேன்னு கூட நான் வாக்குக் கொடுத்தேன்
நீ எனக்கு எப்படி இருந்தாய் என்பதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்
நான் ஊரிலிருந்து திரும்பியதும் எப்படி நீ எல்லாவற்றையும் மறந்தாய்?
இது வெட்கக்கேடானது நானி, நீ சொத்தை மட்டுமே பார்த்தாய், ஆனால் என் அன்பின் மதிப்பை நீ புரிந்து கொள்ளவில்லை.
தங்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை தான் நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். ஆனால் உண்மையான மனிதர்களை உங்களுக்குத் தெரியாது
என்னிடம் சொத்து இல்லை என்பதற்காக என்னை இப்படி விட்டுவிட்டீர்கள்
செல்வம் உள்ளவனுக்கு இதயம் இல்லை என்பது உனக்குப் புரியவில்லை
நமது கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
நான் உமது வார்த்தையைக் காப்பாற்றி, உமக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினேன். நீங்கள் கேட்டதை எல்லாம் செய்தேன்
என் அன்பின் அடையாளமாக உனக்கு எல்லா வகையான பரிசுகளையும், வண்ண நூல்களையும் வாங்கினேன்
எங்க வீட்டுக்கு ஒரு ஆடு கூட வாங்கினேன்
என் நம்பிக்கைகளையெல்லாம் நீ பாழாக்கிவிட்டாய்.
நானி, எனக்கு ஏன் இந்த வலியைக் கொடுத்தாய்?
நான் கிராமத்திற்கு திரும்பி வந்தேன், நீங்கள் எப்படி எல்லாவற்றையும் மறக்க முடியும்?
இது வெட்கக்கேடானது,’
இதோ அந்த பாடலின் காட்சிகள்
என்று அந்த பாடல் முடிகிறது. இந்த பாடல் உருவான ஆண்டும், அது ட்ரெண்டிங் ஆன ஆண்டிற்குள் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?
பாடலின் முழு விபரம்
பாடல் : சீ சீ சி ரே நானி
ஆல்பம்: பலிபுல் ( வருடம்-1995)
ஆல்பம் எண்: SM-374
வீடியோ கலைஞர்: பிபூதி பிஸ்வால், சைலஜா படேல்
ஒளிப்பதிவு: ஜெயந்த் பத்ரா
வீடியோ இயக்குனர் & எடிட்டர்: மனபஞ்சன் நாயக்
உதவி இயக்குனர்: ரிங்கி பட்நாயக்
பாடகர், பாடல் வரிகள் & இசை: சத்ய அதிகாரி

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்