தீபாவளியை முன்னிட்டு டிவியில் இன்றைய படங்கள் லிஸ்ட் இதோ.. போக்கிரி முதல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை!
தீபாவளியை முன்னிட்டு இன்று தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் என பார்க்கலாம்.
தீபாவளியை முன்னிட்டு இன்று தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் என பார்க்கலாம்.
தந்தி 1 டிவி
காலை : 9 மணிக்கு மாயவலை திரைப்படமும், இரவு 9 மணிக்கு நாயகன் வருவான் திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
சன் டிவி
இன்று மாலை 3.30 மணிக்கு சந்தானம் , தாரா அலிசா நடிப்பில் உருவான ஏ1 படமும் இரவு 11 மணிக்கு பிரபுதேவா ஹன்சிகா நடித்த குலேபகாவலி திரைப்படமும் ஒளிபரப்பப்படுகிறது.
கே டிவி
இன்று காலை 7 மணிக்கு ராம்கி, குஷ்பு நடிப்பில் உருவான எனக்கொரு மகன் பிறப்பான் படமும், காலை 10 மணிக்கு ராமராஜன் சங்கீதா நடிப்பில் உருவான அம்மன் கோவில் வாசலிலே படமும் ஒளிபரப்பப்படுகிறது.
மதியம் 1 மணிக்கு விஜயகாந்த், இஷா கோபியார் நடித்த நரசிம்மா படமும், மாலை 4 மணிக்கு சத்தியராஜ் மேக்னா நாயர் நடிப்பில் உருவான தங்கம் திரைப்படமும், இரவு 7 மணிக்கு விஜய் அசின் நடித்த போக்கிரி படமும் இரவு 10.30 மணிக்கு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த பீட்சா படமும் ஒளிபரப்பப்படுகிறது.
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணிக்கு கமல் மனிஷா கொய்ராலா, சுகன்யா நடித்த இந்தியன் படமும், இரவு 9 மணிக்கு சிவகார்த்திகேயன் ஸ்ரீ திவ்யா நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் ஒளிபரப்பப்படுகிறது.
முரசு டிவி
அர்ஜூன் நிதின் சார்மி நடிப்பில் உருவான அனுமான் திரைப்படமும், மாலை 6 மணிக்கு அஜித், சதா நடிப்பில் உருவான திருப்பதி படமும், இரவு 9.30 மணிக்கு சத்தியராஜ் சூசன் நடிப்பில் உருவான பொள்ளாச்சி மாப்ளே திரைப்படமும் ஒளிபரப்பப்படுகிறது.
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு ராம்கி, ஊர்வசி நடித்த மாயா பஜார் திரைப்படமும், மதியம், 1.30 சங்கர், ரூபா நடிப்பில் உருவான ஒரு தலை ராகம் படமும் ஒளிபரப்பப்படுகிறது.
ஜெ மூவிஸ்
காலை 10 மணிக்கு ராமராஜன், சங்கீதா நடிப்பில் உருவான நம்ம ஊரு ராசா படமும், மதியம் 1 மணிக்கு ராஜா ரஞ்சனி நடிப்பில் உருவான நீதானா அந்த குயில் படமும், மாலை 4 மணிக்கு அதித் , ரேஷ்மி நடிப்பில் உருவான தேநீர் விடுதி திரைப்படமும், இரவு 7 மணிக்கு அர்ஜூன், லைலா நடித்த ஜெய் சூர்யா படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
ராஜ் டிவி
காலை 9.30 மணிக்கு எஸ்பிபி , சுஹாசினி நடித்த மனதில் உறுதி வேண்டும். மதியம் 1.30 மணிக்கு சிவாஜி, மாதவி நடிப்பில் உருவான அமர காவியம் படமும், இரவு 9 மணிக்கு விஜயகாந்த் மீனா நடிப்பில் உருவான வானத்தை போல படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணிக்கு கார்த்திக் இளவரசி நடிப்பில் உருவான அவள் சுமங்கலிதான் படமும், காலை 10 மணிக்கு அர்ஜூன், தபு நடிப்பில் உருவான தாயின் மணிக்கொடி படமும் மதியம் 1.30 மணிக்கு மனோ, சீதா நடிப்பில் உருவான பொண்ணு பார்க்க போறேன் படமும் மாலை 4.30 மணிக்கு மோகன் நதியா நடித்த உயிரே உனக்காக படமும் இரவு 7.30 மணிக்கு கார்த்திக், சித்தார்த் நடித்த உன்னை சொல்லி குற்றமில்லை படமும் இரவு 10.30 மணிக்கு விஜயகாந்த், ஜெயப்பிரதா நடித்த ஏழை ஜாதி திரைப்படமும் ஒளிபரப்பப்படுகிறது.
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு சமுத்திர கணி, சங்கவி நடித்த கொளஞ்சி திரைப்படமும், இரவு 7.30 மணிக்கு மோகன்லால், அமலாபால் நடித்த ரன் பேபி ரன் படமும், இரவு .11.30 மணிக்கு சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்த அப்பா படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு சிவாஜி அம்பிகா நடித்த வாழ்க்கை படமும், இரவு 7.30 மணிக்கு சரத்குமார், சுஹாசினி நடித்த சென்னையில் ஒரு நாள் 2 படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
தமிழன் டிவி
மதியம் 2.30 மணிக்கு ரமேஷ் அரவிந்த் ஹேமா நடித்த அமெரிக்கா அமெரிக்கா படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
சினிமா தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்