This Week OTT: வெவ்வேறு ஜானர் ரசிகர்களை குஷியாக்கும் ஓடிடி ரிலீஸ்.. இந்த வார புது வரவு என்ன?
This Week OTT: வெவ்வேறு ஜானர் ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிட்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

This Week OTT: இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாக உள்ளன. பல்வேறு ஜானர்களில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளன. இதனால் பல்வேறு தரப்பு மக்களும் இந்த வார ஓடிடி ரிலீஸை அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். அரசியல், கிரிக்கெட் என பல ஜானர்களின் ரசிகர்கள் புதுப் படங்களில் வருகைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் படங்கள், வெப் சீரிஸ் என 7 முக்கிய வெளியீடுகள் வெளிவர உள்ளன.
கேம் சேஞ்சர்
குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் இந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. சங்கராந்தி பண்டிகையின் போது ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம், ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வரவுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரைம் வீடியோவில் இன்னும் இரண்டு நாட்களில் இந்த படம் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி: இந்தியா vs பாகிஸ்தான்
‘தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி: இந்தியா vs பாகிஸ்தான்’ ஆவணத் தொடர் பிப்ரவரி 7 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி குறித்த இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையே முன்னர் நடந்த முக்கிய போட்டிகள், முக்கிய நிகழ்வுகள், வீரர்களின் கருத்துகள், சுவாரஸ்யமான தருணங்கள் இந்த தொடரில் இடம்பெறும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தொடர் ஒரு விருந்தாக அமையும். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 7ம் தேதி முதல் 'தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி'யைப் பார்க்கலாம்.
மிசஸ்
மிசஸ் திரைப்படம் பிப்ரவரி 7 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக இந்த குடும்ப நாடகத் திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது. மலையாள மொழியில் பிரபலமான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிசஸ் படத்தில் சாண்யா மல்ஹோத்ரா, நிஷாந்த் தஹியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்த்தி கடவ் இயக்கியுள்ளார்.
விவேகானந்தன் வைரல்
விவேகானந்தன் வைரல் திரைப்படம் பிப்ரவரி 7 அன்று ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள நகைச்சுவை நாடகத் திரைப்படமான விவேகானந்தன் வைரலின் தெலுங்கு டப்பிங் பதிப்பாக இது வெளியாகிறது. விவேகானந்தன் வைரல் படத்தில் ஷைன் டாம் சாக்கோ, சுவஸ்திகா கிரேம் ஆண்டனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கில் பிப்ரவரி 7 முதல் ஆஹாவில் பார்க்கலாம்.
கோபலி
தெலுங்கு திரைப்படமான 'கோபலி' என்ற திரில்லர் வெப் தொடர் இந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துவிட்டது. ராயலசீமா பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில் ரவி பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்; ரேவந்த் லெவகா இயக்கியுள்ளார்.
தி மெஹ்தா பாய்ஸ்
உணர்வுபூர்வமான நாடகத் திரைப்படமான தி மெஹ்தா பாய்ஸ் பிப்ரவரி 7 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. இந்த படத்தில் போமன் இராணி, அவினாஷ் திவாரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை போமன் இராணியே இயக்கியுள்ளார். தந்தை மகன் உறவை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பேபி ஜான்
வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்த 'பேபி ஜான்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இன்று ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துவிட்டது. ஆனால், rent-on-demand முறையில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளது. கடந்த டிசம்பர் 25 அன்று இந்த ஆக்ஷன் நாடகத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் படமான 'தெரி'யின் இந்தி ரீமேக்காக 'பேபி ஜான்' படத்தை இயக்குனர் கலீஸ் இயக்கியுள்ளார்.

டாபிக்ஸ்