This Week OTT Movies: பாக்ஸ் ஆபிஸை அடித்து தூக்கிய படம்.. இந்த வார ஓடிடியில் என்னனென்ன படம் ரிலீஸ்?
This Week OTT Movies: ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் படங்களின் தொகுபப்பை இங்கு காணலாம்.

This Week OTT Movies: ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் புதிய படங்கள் சில ஓடிடியில் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. சில வெவ்வேறு ஜானர் சூப்பர் ஹிட் படங்களும் வெவ்வேறு ஓடிடி தளங்களில் வரவிருக்கின்றன. அதன்படி, இந்த வாரம் (ஏப்ரல் 7-13) ஓடிடிக்கு வரவிருக்கும் 7 முக்கியமான படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கோர்ட்
தெலுங்கு சட்டத் திரைப்படமான ‘கோர்ட்’ இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. இந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கிற்கு வரவிருக்கிறது. பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஹன், ஸ்ரீதேவி முன்னணி வேடங்களில் நடித்த இந்த படம் மார்ச் 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.57 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ராம் ஜகதீஷ் இயக்கிய கோர்ட் படத்தை நேச்சுரல் ஸ்டார் நானி தயாரித்துள்ளார்.