Top Telugu OTT Movies: தெலுங்கு பட பிரியர்களே.. ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாதா 10 தெலுங்கு காதல் படங்கள் லிஸ்ட் இதோ..
Top Telugu OTT Movies: தெலுங்கு திரைப்பட பிரியர்கள் பார்க்க வேண்டிய 10 ரொமான்டிக் படங்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம். எந்த படம் எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

Top Telugu OTT Movies: தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களை விரும்பிப் பார்ப்போரின் எண்ணிக்கை மிக அதிகம். அதுவும் தற்போது ஓடிடி தளங்களின் வருகைக்கு பின், படங்களுக்கான மொழிகள் மக்களுக்கு தடையாகவே இருப்பதில்லை.
ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, எந்த மொழி படத்தையும் அவர்களின் விருப்பம் போல் பார்க்கலாம். சமீபத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான தண்டேல் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், தெலுங்கில் பார்க்க வேண்டிய 10 முக்கிய படங்களின் லிஸ்ட்டை காணலாம்.
அர்ஜுன் ரெட்டி
சந்தீப் வங்கா எழுதி இயக்கிய தெலுங்கு திரைப்படம் இது. விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஹுல் ராமகிருஷ்ணன், ஜியா ஷர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது. விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் வேல்யூவை அதிகரித்த படம் இது. மக்கள் இந்த படத்தின் மேல் கொண்ட ஈர்ப்பால் தமிழ், ஹிந்தி, போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
டியர் காம்ரேட்
இதுவும் பிரபலமான தெலுங்கு ரொமாண்டிக் ஆக்ஷன் திரைப்படம். பாரத் கம்மா எழுதி இயக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா மற்றும் ஸ்ருதி ராமச்சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படமும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் உள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் இசையும் பெரும்பாலான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.
ஷாம் சிங்கா ராய்
ராகுல் சங்கிருத்யான் இயக்கிய இந்த திரைப்படம் ஒரு பீரியட் கதை போன்ற பேன்டசி படமாக உள்ளது. இந்த படத்தில் நானி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், மேலும் சாய் பல்லவி மற்றும் கிருத்தி ஷெட்டி நாயகிகளாக நடித்துள்ளனர். நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
ஆர்யா
இது 2004 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம். அல்லு அர்ஜுன், அனு மேஹ்தா மற்றும் சிவா பாலாஜி நடித்துள்ளனர். இந்தப் படம் புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் இயக்கிய முதல் படம் இது. இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
உப்பேனா
தெலுங்கு மொழி ரொமாண்டிக் டிராமா. புச்சி பாபு சானா இயக்கிய முதல் படம் இது. விஜய் சேதுபதி உடன் பஞ்ச் வைஷ்ணவ் தேஜ் மற்றும் கிருதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் உள்ளது.
மேலும் படிக்க: நாக சைதன்யாவின் முதல் 100 கோடி கலெக்கஷன் படம் எது தெரியுமா?
பருகு
இதுவும் தெலுங்கு ரொமாண்டிக் ஆக்ஷன் திரைப்படம். பாஸ்கர் இயக்கியுள்ளார். அல்லு அர்ஜுன், ஷீலா கவுர் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
குஷி
இந்த படம் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் ஹிட் அடித்த படம். தெலுங்கிலும் அதே பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் மற்றும் பூமிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் உள்ளது.
ஈகா
கிச்சா சுதீப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஈகா திரைப்படம் ரொமாண்டிக் ஆக்ஷன் திரைப்படம். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்தப் படத்தில் நானி, சமந்தா மற்றும் சுதீப் உள்ளிட்டோர் நடித்தனர். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடியில் உள்ளது.
பிருந்தாவனம் (சன் நெக்ஸ்ட் ஓடிடி) மற்றும் மிர்ச்சி (அமேசான் பிரைம் வீடியோ) ஆகியவை இந்த டாப் 10 பட்டியலில் உள்ள தெலுங்கு ரொமாண்டிக் ஆக்ஷன் திரைப்படங்களாகும்.
தண்டேல்
தண்டேல் ஒரு நல்ல காதல் கதை திரைப்படம். அதோடு தேசபக்தியையும் கலந்து பார்வையாளர்களுக்கு முன் வைத்துள்ளார் இயக்குனர் சந்து. எளிதில் யூகிக்கக்கூடிய, பழக்கமான கதை என்றாலும், பார்வையாளர்களை இருக்கையில் அமர வைக்கும் இயக்குனரின் கதை சொல்லும் பாணி இந்த படத்தின் நல்ல அம்சமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
