தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இப்படி ஒரு மனுஷன் இருக்க முடியுமா? எத்தனை தோல்விகள்.. எப்படி உச்ச நட்சத்திரமானார்.. தமிழ் சினிமாவின் குறியீடு அஜித்

இப்படி ஒரு மனுஷன் இருக்க முடியுமா? எத்தனை தோல்விகள்.. எப்படி உச்ச நட்சத்திரமானார்.. தமிழ் சினிமாவின் குறியீடு அஜித்

Suriyakumar Jayabalan HT Tamil
May 01, 2024 05:40 PM IST

HBD Ajith Kumar : பல விமர்சனங்களை சந்தித்த அஜித் குமார் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம்தான். இந்த பதிவில் நடிகர் அஜித் குமார் நடித்த வெளியாகி தோல்வியை சந்தித்த திரைப்படங்களின் பட்டியலில் இங்கே காணலாம்.

நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டு உச்ச நாயகர்களை வைத்து எப்போதும் ரசிகர்களுக்கிடையே போட்டி நிலவும். எம்ஜிஆர் சிவாஜி காலம் தொட்டு இன்றுவரை அந்த போட்டிகள் தொடர்ந்து வருகின்றன. தற்போது சீனியர் நடிகர்களாக மாறிவிட்டவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய போட்டிகள் தற்போது வரை நிலவி வருகிறது.

மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். அதேசமயம் அவருக்கு எதிராக ரசிகர்களும் தூக்கிப் பிடித்தது நடிகர் அஜித்தை தான். பல்வேறு விதமான தோல்வி படங்களை அவர் கொடுத்திருந்தாலும் அவர்களின் ரசிகர்களின் பட்டாளம் இன்றுவரை குறைந்தபாடில்லை.

வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து ரசிகர்களின் ஆரவாரத்தில் உச்சத்தில் தற்போது வரை இருந்து வரும் ஒரே ஒரு நடிகர் என்று கூறினால் அது நடிகர் அஜித் குமார் தான். சமீப காலமாக சினிமாவை விட்டு வெகு தொலைவாக சென்று வருகிறார் அஜித்குமார். மே ஒன்றாம் தேதி அன்று பிறந்த இவர், ரசிகர்கள் மத்தியில் உழைப்பின் சின்னமாக விளங்கி வருகிறார்.

சமீபத்தில் திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகள் நிரம்ப நிரம்ப ஓடிக் கொண்டிருக்கின்றது. மே ஒன்றாம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாள் என்ற காரணத்தினால் அவருடைய ஹிட் வரிசையில் வெளியான தீனா திரைப்படம் மீண்டும் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பல விமர்சனங்களை சந்தித்த அஜித் குமார் இன்று உச்ச நட்சத்திரமாக இருப்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம்தான். இந்த பதிவில் நடிகர் அஜித் குமார் நடித்த வெளியாகி தோல்வியை சந்தித்த திரைப்படங்களின் பட்டியலில் இங்கே காணலாம்.

நேசம்

 

இயக்குனர் கே சுபாஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வெளியான காதல் திரைப்படம் இது இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார. பாடல்கள் வெற்றியடைந்த அளவிற்கு இந்த திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியடையவில்லை.

ரெட்ட ஜடை வயசு

 

இயக்குனர் சி சிவகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எது காதல் மற்றும் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஆஞ்சநேயா

 

இயக்குனர் மகாராஜன் இயக்கத்தில் அஜித்குமார் மற்றும் மீரா ஜாஸ்மின் இருவரும் சேர்ந்து நடித்த அதிரடி திரைப்படம் எது இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது வெளியான பிறகு திரையரங்குகள் வெறுமையை சந்தித்தன.

ஜனா

 

ஹாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித்குமார் மற்றும் சினேகா நடித்து வெளியான ஆக்சன் திரைப்படம் இந்த ஜனா. பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தாலும் வெளியான பிறகு அனைவருக்கும் கிடைத்தது ஏமாற்றம்தான்.

ஜி

 

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. வித்யாசாகர் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் பாடல்கள் வெற்றி பெற்ற அளவிற்கு திரைப்படம் வெற்றிபெறவில்லை.

ஆழ்வார்

 

அதிரடி திரைப்படமாக 2007 ஆம் ஆண்டு இயக்குனர் செல்லா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெறுமையை கண்டன. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லாமல் படுதோல்வியை இந்த திரைப்படம் சந்தித்தது.

ஏகன்

 

பில்லா திரைப்படம் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உச்ச நடிகராக நின்று கொண்டிருந்தார் அஜித்குமார். அதற்குப் பிறகு நடன இயக்குனர் ராஜு சுந்தரம் இயக்கத்தில் ஏகன் திரைப்படத்தில் நடித்தார். பில்லா திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்த திரைப்படம் கொடுத்தது.

பில்லா 2

 

பில்லா திரைப்படத்தை எதிர்பார்த்தது போலவே இந்த திரைப்படத்தையும் எதிர்பார்த்து அனைத்து ரசிகர்களும் திரை அரங்குகளை நோக்கி படையெடுத்தனர். சக்ரி இயக்கத்தில் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

விவேகம்

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் விவேகம். கடினமான உழைப்பை அஜித்குமார் கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்