Deepika Padukone: கர்ப்பமா இருக்கும் போது எதுக்கு ஹீல்ஸ்?..; “கருப்பை இல்லை.. கருத்தும் இல்லை” - பதிலடி கொடுத்த நடிகை!
Deepika Padukone: இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், கர்ப்பமாக இருக்கும் போதும் தீபிகாவின் ஆடைத்தேர்வை பாருங்கள்.. அவர் உயரமாக இருந்த போதும் கூட, ஹீல்ஸ் செருப்பை பயன்படுத்தி இருக்கிறார் என்று பதிவிட்டார். அதற்கு பிரபல நடிகை பதிலடி கொடுத்திருக்கிறார்.

தீபிகா படுகோன் அண்மையில் கல்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், நிகழ்ச்சிக்கு நவீன ரக உடையையும், உயரமான ஹீல்ஸ் செருப்பையும் அணிந்து வந்தார். இது குறித்து கமெண்ட் எழுப்பிய இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், கர்ப்பமாக இருக்கும் போதும் அவரது ஆடைத்தேர்வை பாருங்கள்.. அவர் உயரமாக இருந்த போதும் கூட, ஹீல்ஸ் செருப்பை பயன்படுத்தி இருக்கிறார் என்று பதிவிட்டார்.
பதிலடி கொடுத்த நடிகை
இதற்கு பதிலடி கொடுத்த இன்னொரு இன்ஸ்டாகிராம் பயனர், அவர் ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும் என்பது குறித்து யாரும் அறிவுரை கூறத்தேவையில்லை. அவருக்கு எது சரியாக இருக்கிறதோ, அதை அவர் அணிந்திருக்கிறார். இதற்கு கமெண்ட் செய்திருக்கும் நடிகை ரிச்சா சதா.. “கருப்பை இல்லை... கருத்தும் இல்லை..” என்று பதிவிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கமல் செய்த குசும்பு
முன்னதாக, தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் குழந்தை, வரும் காலத்தில் என்ன செய்யும், எதில் ஈடுபடும் என்பதை, அந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன் கணித்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
கல்கி திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு புரமோஷன் தொடர்பான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் படக்குழு சார்ந்த கலைஞர்கள் கல்கி திரைப்படம் குறித்து உரையாடினர். அந்த உரையாடலில் கலந்து கொண்ட தீபிகா படுகோன் “ நான் அப்போது மும்பையில் இருந்தேன். பல்வேறு படப்பிடிப்புகளில் நான் பங்கேற்ற காரணத்தால், அது ஒரு நீண்ட இடைவெளியாக இருந்தது. அப்போது நாகியிடம் இருந்து மிஸ்டு கால் ஒன்று வந்திருந்தது.
அந்த அழைப்பை பார்த்ததும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது குறித்து ஆவலாக இருந்தேன். இதனையடுத்து, அவரை திரும்ப அழைத்து என்ன விஷயம் என்று கேட்கும் போது, நம்முடைய முதல் நாளில் கமல்ஹாசனுடனான காட்சியை எடுக்கப்போகிறோம் என்று ஒரு குழந்தை போல ஆர்ப்பரிப்போடு சொன்னார். ” என்றார்.
இடைமறித்த கமல்
இந்த நிலையில், அதனை இடை மறித்த கமல்ஹாசன்… (தீபிகா படுகோன் வயிற்றில் இருக்கும் குழந்தையை சுட்டிக்காட்டி).. அதுதான், இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த குழந்தைதான். வரும் காலத்தில் அந்த குழந்தையும், திரைப்படம் எடுக்கும் என்று நம்புவோம்” என்றார். இதைக்கேட்ட தீபிகா மற்றும் படக்குழுவினர் சிரித்தனர்.
படம் குறித்து?
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. பிரபாஸ் முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்தப்படத்தை வைஜேந்தி மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருக்கிறது.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. அந்த ட்ரெயிலரில் இடம் பெற்று இருந்த சில கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்டார் ட்ரெக் படத்திற்காக, தான் செய்த வேலைகளில் இருந்து திருடப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக இருப்பதாக ஹாலிவுட் கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட் ஆலிவர் பெக் குற்றம் சாட்டி இருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்