NayanVigneshShivan: 'நீங்க ஏன் இதைப் பண்ணமாட்டியுறீங்கன்னு சொல்வார்' - கணவர் விக்னேஷ் சிவன் பற்றி மனம்திறந்த நயன்தாரா
நயன்தாரா - விக்னேஷ் சிவன் பிரிவு குறித்து வதந்திகள் குறித்து செய்திகள் பரவி வந்த நிலையில், சமீபத்தில் தனது கணவர் குறித்து ஒரு விழா மேடையில் நடிகை நயன்தாரா உருக்கமாகப் பேசியது வைரல் ஆகி வருகிறது.

கோலிவுட் சினிமாவின் ஸ்டார் தம்பதிகளாக இருந்து வரும் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன், சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக காதல் உறவில் இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 2022இல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டையர்களை பெற்றெடுத்தார்கள். இவர்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோ நீல் என் சிவன், உலக் தாய்விக் என் சிவன் என பெயர் வைத்துள்ளனர்.
எவ்வித தயக்கமும் இல்லாமல் இந்த ஜோடி தங்களுக்கு இடையே இருக்கும் அன்பு, காதலை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அத்துடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாரா செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனது ஆதரவையும், பாராட்டையும் தெரிவிப்பதில் முதல் ஆளாக இருந்து வந்தார்.
இதையடுத்து சமீபத்தில் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் நயன்தாரா. சில மணி நேரங்களிலேயே அவரைப் பின் தொடர்வோர் எண்ணிக்கையானது மில்லியன்களைக் கடந்தது. இதைத்தொடர்ந்து நயன்தாரா இன்ஸ்டாவில் தனது கணவரான விக்னேஷ் சிவனை Unfollow செய்திருப்பதோடு, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் மறைமுகமாக கருத்தை வெளிப்படுத்தும் விதமாக "அவள் தனது கண்களில் கண்ணீருடன் 'எனக்கு இது கிடைத்தது' என்று எப்போதும் சொல்லப் போகிறாள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த பலரும் நட்சத்திரத் தம்பதிகளான நயன் - விக்னேஷ் பிரியப்போகிறார்கள் என வதந்தி பரவியது. அதன்பின் அது டெக்னிக்கல் பிரச்னை என விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நெருக்கமாக இசையைக் கேட்டு ரசிக்கும்வீடியோவைப் பகிர்ந்தார், விக்னேஷ் சிவன். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் 'நான் இழந்துவிட்டேன்' என எழுதியிருந்தார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்னையா எனப் பலரும் யோசிக்க வைத்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், தனது ஃபெமி அழகு சாதன நிறுவனத்தின் வெற்றிவிழாவில் நடிகை நயன்தாரா, தனதுவெற்றிக்குப்பின் இருக்கும் கணவர் விக்னேஷ் சிவன் பற்றி உருக்கமாகப் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதுதொடர்பான காணொலியை ‘’ட்ரெண்ட் டாக்ஸ்'' என்னும் யூட்யூப் சேனல் பதிவுசெய்துள்ளது.
அதில் பேசும் நடிகை நயன்தாரா, ‘’ஒரு விஷயம் சொல்ல மறக்கல. எப்பயுமே நம்ம காதில் விழுற ஒரு விஷயம், ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாடி இருக்கிறாங்கன்னு சொல்றது. ரொம்ப Rareஆ பார்த்த விசயம். நான் அந்த மாதிரி பார்த்தது இல்ல. இன்னிக்கு வெற்றிகரமாக இருக்கிற எல்லா பெண்களும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிற எல்லா பெண்களுக்கும் பின்னாடி, கண்டிப்பா ஒரு ஆண் இருக்கிறார். ஏன் லைஃபில் நான் செய்கிற ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாடியும், சினிமா தவிர, ஏன்னா சினிமா நிறைய வருஷமா செஞ்சிருக்கேன்.
நான் என்னைக்கு நான் என் கணவரை மீட் பண்ணுனேனோ,நான் மிகப்பெரிய விஷயங்கள் செய்யணும்னு கத்துக்கொடுத்தார். என்னைக்குமே நீங்கள் ஏன் இதை செய்யுறீங்க, நீங்கள் ஏன் அதைச் செய்யுறீங்க அப்படின்னு கேட்டதுகிடையாது.
இதுக்கு முன்னாடி யாரும் கேள்வி கேட்கலைன்னா அது மிகப்பெரிய விஷயம் நினைச்சிட்டு இருந்தேன். அது மட்டும் மிகப்பெரிய விஷயம் இல்லைன்னு அவர் (கணவர்) புரியவைச்சார்.
நீங்கள் ஏன் இதைப் பண்ணமாட்டியுறீங்க?; நீங்கள் ஏன் இதைப் பண்ணக்கூடாதுன்னு கேட்பவர் தான் என் கணவர் விக்னேஷ் சிவன்.
இதை நான் எந்த மேடையில் பேசினது கிடையாது. அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது கிடையாது. ஆனால், இன்னிக்கு நீங்கள் எல்லாரும் என் குடும்பம் மாதிரி தெரியுறீங்க.
உங்கள் லைஃப்லயும் யாராவது ஒரு ஆண் கூட இருப்பாங்க. என்னுடைய மிகப்பெரிய சப்போர்ட். என்னுடைய மிகப்பெரிய பலம் கோமதி மேடம் தான். ஃபெமி பிராண்ட்டை பெரிதாக கிரியேட் செய்ததற்கும் நாம சமூக அக்கறையாக சில விஷயங்கள் செய்யணும்ங்கிறதை கத்துக்கொடுத்தது. ஃபெமி பிராண்டை கிரியேட் செய்தது, இன்னிக்கு இப்படி ஒரு ஈவண்ட் நடக்கிறதுக்கும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறதுக்கும் எல்லாத்துக்குமே காரணம் வந்து, என் கணவர் விக்னேஷ் சிவன் தான். அதனால் என் கணவருக்கு மட்டும் தனியாக ஒரு நன்றி சொல்லணும்'' என்றார்.
இந்த உண்மையான அன்பு இருவருக்குள்ளும் எப்போதும் இருக்கவேண்டும் என நயன்தாராவின் ரசிகர்கள் அந்த வீடியோவில் கமெண்ட் பதிவுசெய்துவருகின்றனர்.
நன்றி: ட்ரெண்ட் டாக்ஸ்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்