HBD Sukhwinder Singh : 90களில் பிரபலமான வித்யாசமான குரல்! அனைவரையும் ஈர்த்த குரல்! பாடகர் சுக்வீந்தர் சிங் பிறந்த தினம்!
HBD Sukhwinder Singh : 90களில் பிரபலமான வித்யாசமான குரலுக்கு சொந்தக்காரர். அந்தக்குரல் அனைவரும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது. சுக்வீந்தர் சிங்குக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. அவர் பிறந்த நாளில் அவர் குறித்த தகவல்கள் இங்கே.
ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ, சிலோனு சிங்கள பெண்ணே, அர்ஜீனரு வில்லு, தைய தையா, கிட்ட நெருங்கி வாடா, லக்கி, லக்கி, சலாம் குலாமு, நதியே அடி நைல் நதியே, நான் சால்ட் கோட்டா என்ற வித்யாசமான குரலை 90களில் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. அந்த குரலுக்கு இருவர்தான் சொந்தக்காரர்கள். ஒருவர் உதித் நாராயண், மற்றொருவர் சுக்வீந்தர் சிங். சுக்வீந்தர் சிங் பிறந்த தினம் இன்று.
இவர் பாலிவுட் பாடகர். இவர் ஸ்லம் டாக் மில்லனியர் படத்தில் ஜெய் ஹோ என்ற பாடலை பாடியுள்ளார். அந்தப்பாடல் பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்காக அகாடமி விருது வென்றது. சிறந்த பாடலுக்கான கிராமி விருதையும் பெற்றது.
இவர் உயிரே படத்தின் தைய்ய தைய்யா பாடலையும் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை இவர் சப்னா அஸ்வதியுடன் சேர்ந்து பாடியிருப்பார். பாடல் தமிழ் மற்றும் இந்தி இரண்டு மொழிகளிலும் படு ஹிட்.
இவர் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரைச் சேர்ந்தவர், இவர் முண்டா சௌத்தால் என்ற பஞ்சாபி ஆல்பம் பாடியுள்ளார். இவரது இசைக்குழு இசைக்கச்சேரிகளை நடத்தி வந்தது. அப்போதுதான் அவருக்கு தமிழில் ரட்சகன் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் பாலிவுட்டில் ஆஜா சனம் என்ற பாடலை பாடினார். பின்னர் தில்சே படததிற்கு இவர் பாடிய சைய்யா சைய்யா (தமிழில் தைய்ய, தைய்யா) பாடல் இவருக்கு புகழை பெற்றுத்தந்தது.
இவர் ஹாக்கி உலககோப்பை பாடலையும் அண்மையில் பாடியுள்ளார். இவருக்கு சைய்ய சைய்யா பாடலுக்கு சிறந்த பிண்ணனி பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது. ஹவுலே, ஹவுலே என்ற பாடலுக்கும் இவருக்கு விருது கிடைத்தது. இவர் சிறந்த ஆண் பிண்னணி பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
அவரின் வித்யாசமான குரல் பலரையும் ஈர்பதாக இருந்தது. 90களில் பிரபலமான சுக்வீந்தர் சிங்குக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் இருந்தது. அவரது பிறந்த நாளில் அவரை ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்