HBD Soori : ‘பரோட்டா, புஷ்பா கொடுத்த பிரபலம்!’ காமெடி நடிகர் சூரி பிறந்த தினம் இன்று!
HBD Soori : சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் மதுரையில் இருந்து வந்து சென்னையில் தங்கி சினிமாவில் சாதித்த நடிகர் சூரி பிறந்த தினம் இன்று. இன்றைய நாளில் அவர் குறித்த தகவல்கள் இங்கே பார்க்கலாம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூரி
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ஒரு காட்சியில் ஒரு பரோட்டா கடை நடத்தும் போட்டியில், அவர் எண்ணிலடங்கா பரோட்டக்களை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் அந்த கடை ஊழியர் குறிப்பிட்ட அளவு பரோட்டா சாப்பிடவில்லை என்று அவரை ஜெயிக்கவிடாமல் செய்வார்.
ஆனால் அப்போதும் அசராத சூரி, மறுபடியும் முதலில் இருந்து பந்தையத்தை துவங்குவதாக கடை ஊழியரிடம் தகராறு செய்வார். அந்த காமெடி தந்த அடையாளத்தால் பிரபலமானார்.
அந்தக்காட்சி தத்ருபமாக வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுவதும் பட்டினியாக இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் சூரி கூறினார். அவரின் அந்த மெனக்கெடல்தான் அவருக்கு இன்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி தந்துள்ளது.
