HBD Sadhana Sargam தேனினும் இனிமை! மனதை உருக்கும் மாய குரலுக்கு சொந்தக்காரர்! சாதனா சர்கம் பிறந்த தினம் இன்று!
HBD Sadhana Sargam : ஒரு காதலோ, காதல் தோல்வியோ, காதல் வாட்டும் தனிமையோ, காதல் பிரவோ, காதல் விரக்தியோ எந்த உணர்வானாலும் உங்கள் போனிலோ அல்லது மற்ற டிவைசில் சாதனா சர்கம் பாடல்களை ப்ளே லிஸ்டில் ஓடவிட்டு இந்த அனைத்து உணர்வுகளையும் மாறி மாறி ரசிக்க முடியும். அவரது குரலுக்கு அவ்வளவு வீரியம் உண்டு.

மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்…, ரகசியமாய்… ரகசியமாய்…, மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே…, காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…, கொஞ்சும் மைனாக்களே…, பாட்டு சொல்லி பாட சொல்லி…, முகுந்தா…. முகுந்தா…, உதயா… உதயா…, உன் பேரை சொன்னாலே…, அக்கம் பக்கம் யாருமில்லா…., சிநேகிதனே… சிநேகிதனே…, மேற்கே… மேற்கே… சுவாசமே… சுவாசமே…., மன்மதனே நீ கலைஞன் தான்…., சாணக்கியா… சாணக்கியா…., என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர்…., ஒரு வார்த்த கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்…., சுடிதார் அணிந்து வந்த சொர்கமே…, நிபுணா… நிபுணா… என் நிபுணா…., எல்லாப்பாட்டையும் மனசுக்குள்ள ஒரு நிமிடம் பாடி பாத்தீங்களா?
80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களை மனங்களை கொள்ளை கொண்ட பாடல்கள் இவை. காதலில் இவர் உருகி பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் காதலிக்காதவர்களை கூட காதலில் தள்ளிவிடும். அந்தளவுக்கு அனைவரையும் சுண்டியிழுக்கும் காந்த குரலுக்கு சொந்தமான பாடகி சாதனை சர்கத்தின் பிறந்த நாள் இன்று.
ஒரு காதலோ, காதல் தோல்வியோ, காதல் வாட்டும் தனிமையோ, காதல் பிரவோ, காதல் விரக்தியோ எந்த உணர்வானாலும் உங்கள் போனிலோ அல்லது மற்ற டிவைசில் சாதனா சர்கம் பாடல்களை ப்ளே லிஸ்டில் ஓடவிட்டு இந்த அனைத்து உணர்வுகளையும் மாறி மாறி ரசிக்க முடியும். அவரது குரலுக்கு அவ்வளவு வீரியம் உண்டு.