HBD Raguvaran : தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சூப்பர் ஸ்டார் வில்லன்! ரகுவரன் பிறந்த தினம் இன்று!
இவர் 1958ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கொல்லங்கோட்டில் பிறந்தவர். இவர் ராதா கிருஷ்ண மேனன் மற்றும் சத்யவதி அம்மாவின் பேரன் ஆவார். இவரது பெற்றோர் வேலாயுதன் மற்றும் கஸ்தூரி ஆவர்.

ரகுவரன், 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர். தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்த நடிகர். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அதில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்த மொழிகளில் 150 படங்களில் நடித்தவர். தனது வில்லன் நடிப்பு மற்றும் குரலுக்காக தனி இடம் பிடித்தவர். இவர் கதாநாயகனாக நடித்த ஒரு தொடர் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இவர் 1958ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கொல்லங்கோட்டில் பிறந்தவர். இவர் ராதா கிருஷ்ண மேனன் மற்றும் சத்யவதி அம்மாவின் பேரன் ஆவார். இவரது பெற்றோர் வேலாயுதன் மற்றும் கஸ்தூரி ஆவர்.
இவர் கோயம்புத்தூர் அரசு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளங்கலை படிப்பை விட்டுவிட்டு, நடிப்பை தேர்ந்தெடுத்தார். இவர் முதலில் மலையாள திரையுலகில் நுழைய முயற்சித்தார். அது லாபகரமானதல்ல மற்றும் அதற்கு பணம் செவாகும் என்று தெரிந்தது.