HBD Laxmi : குழந்தை முதல் பாட்டி வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கிய நடிகை லட்சுமி பிறந்த தினம்!
HBD Laxmi : இவர் ஒருமுறை தனது பேட்டியில், ‘நான் இளைஞர்கள் சூழ அவர்களுடன் பணபுரிய ஆசைப்படுகிறேன். நம் அனைவருக்கும் இறந்த காலம் என்று ஒன்று இருக்கும். ஆனால், எதிர்காலம் இருக்குமா என்று தெரியாது. ஆனால், அவர்களுக்கு எதிர்காலம் உள்ளது.

கதாநாயகி, அம்மா, பாட்டி என எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதில் கச்சிதமாக பொருந்துவார். திறமையான நடிப்பு. இவரது நடிப்பில் கூடுதலாக இழைந்தோடும் குழந்தைத்தனம் மற்றும் அப்பாவி தனத்தை ரசிக்காத சினிமா பிரியர்களே இருக்க முடியாது.
இவரது ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் சினிமா பிரியர்கள் எப்போதும் இவரை பார்த்து வியப்பது ஒன்று மட்டும்தான். எப்படி இவரால் இப்படியெல்லாம் நடிக்க முடிகிறது என்பதுதான்.
இவர் ஒருமுறை தனது பேட்டியில், ‘நான் இளைஞர்கள் சூழ அவர்களுடன் பணபுரிய ஆசைப்படுகிறேன். நம் அனைவருக்கும் இறந்த காலம் என்று ஒன்று இருக்கும். ஆனால், எதிர்காலம் இருக்குமா என்று தெரியாது. ஆனால், அவர்களுக்கு எதிர்காலம் உள்ளது.
அவர்கள் நல்ல பலத்துடன் வருகிறார்கள்’ என்றார். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இவர் பேசியவற்றைதான் இவர் வாழ்ந்து காட்டினார் என்பது மட்டும் உண்மை.
குமாரி ருக்மணி என்ற நடிகைக்கும், ஏரகுடிப்பட்டி வரதராவ் என்ற இயக்குனருக்கும் பிறந்தவர் லட்சுமி. 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி பிறந்தார். திரை பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், இவருக்கு சினிமாவை வாழ்க்கையாக தேர்ந்தெடுப்பதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை.
9 வயதிலேயே இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1961ம் ஆண்டு இயக்குனர் டி.என்.ராமண்ணா இயக்கிய ஸ்ரீவள்ளி படத்தில் லட்சுமி நடித்தார். அப்போது முதலே அவர் பரபரப்பான நடிகையானார். அவருக்கு சினிமாவில் பின்னடைவே இல்லை.
குழந்தை முதல் பாட்டி வரை வாழ்நாள் முழுவதிலும் சினிமாவில் நடித்துவிட்டார். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
3 தேசிய விருதுகள், 3 நந்தி விருது மற்றும் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். ஒருமுறை பேட்டியில் தான் நடித்த ஓ பேபி என்ற படம் குறித்து பேசினார். அப்போது ‘அதில் நடித்த பெண் ஒருவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அது எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அவர் என்னை விட சிறப்பாக நடித்து விடுவார் என எண்ணினேன்.
எனவே நான் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்’ என்று கூறியிருந்தார். எப்போதும் நாம் செய்வது சிறந்த வேலை என்ற திருப்தி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறும் உன்னத நடிகை. ‘உங்களுக்கு ஒரு வாழ்க்கைதான் உள்ளது. அதை நீங்கள் சிறப்பாக வாழவிடில் மீண்டும் பிறந்து வந்து மீண்டும் அதை வாழ்ந்துவிட்டு செல்லவேண்டி வரும்’ என்று கூறியவர்.
வேறு தலைமுறையை சேர்ந்தவர் என்றாலும், முற்போக்கான சிந்தனைகளைக்கொண்டவர், ஒவ்வொருவரும் அவரது வாழ்வில் அக்கறை கொண்டு அதை முழுமையாக வாழ்ந்துவிடவேண்டும் என்று கூறுபவர்.
‘உங்களுக்கு மனஉறுதியும், நீங்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருந்தாலே உங்கள் தேவைகளின், ஆசைகளும் முழுமையடைந்துவிடும். அதுவே உங்களை உடல் மற்றும் மனம் இரண்டையும் மகிழ்ச்சியுடனும், பலமாகவும் வைக்கும். வாழ்க்கையில் நிறைய செய்ய வேண்டும்.
ஆனால் எனக்கு சமைக்கவும், நடிக்கவும் மட்டுமே தெரியும்’ என்று கூறும் அப்பாவி நடிகை. லட்சுமி பிறந்த நாளில் அவரை ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.

டாபிக்ஸ்