தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Gv Prakash Kumar : உருகுதே.. மருகுதே.. என ரசிகர்களை நெகிழ வைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று!

HBD GV Prakash Kumar : உருகுதே.. மருகுதே.. என ரசிகர்களை நெகிழ வைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 13, 2024 05:50 AM IST

HBD GV Prakash Kumar : தமிழ் திரைப்பட உலகில் கடந்த 1993 ல் ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயில் என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமான போது அவருக்கு வயது ஆறு. பின்னர் 1995 ல் பம்பாய் படத்திலும் பாடினார். சினிமா பின்புலம் இருந்ததாக கூறப்பட்ட‍ போதிலும் தனது திறமையால் முன்னேறியவர்.

உருகுதே.. மருகுதே.. என ரசிகர்களை நெகிழ வைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று!
உருகுதே.. மருகுதே.. என ரசிகர்களை நெகிழ வைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் திரைப்பட உலகில் கடந்த 1993 ல் ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயில் என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமான போது அவருக்கு வயது ஆறு. பின்னர் 1995 ல் பம்பாய் படத்திலும் பாடினார். சினிமா பின்புலம் இருந்ததாக கூறப்பட்ட‍ போதிலும் தனது திறமையால் முன்னேறியவர். சிறுவயதில் இருந்தே இசைக்கருவிகள் வாசிக்க ஆரம்பித்தார். 

இசை ஆர்வம்

கீ போர்டு வாசிப்பதில் வல்லவர். பள்ளி படிக்கும் போதே பல பாடல்கள் பாடியுள்ளார். பள்ளி கல்வியோடு முடித்து கொண்டவர் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். ஆரம்ப காலத்தில் பரத்வாஜ் அவர்களிடம் பணியாற்றினார். பின்னர் ரகுமானிடமும் பணியாற்றினார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். இப்போதும் கூட

"உருகுதே.. மருகுதே.." பாடல் நம் மனதில் நிறைந்து நிற்கிறது. பல இசையமைப்பாளர்களோடு பணி புரிந்த போதிலும் அவர் தனியாக இசையமைத்த படம் தான் வெயில்.

இசையமைப்பாளர் என்பதைத் தொடர்ந்து 2015 ல் வெளிவந்த டார்லிங் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் எனக்கு இன்னோரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புருஸ்லீ, நாச்சியார் செம சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை, நேச்சர், ஜெயில், செல்ஃபி, ஐங்கரன் என்று வரிசையாக படங்கள் நடித்து வரும் பிசியான தமிழ் ஹீரோவாக இருக்கிறார். இருந்தும் அவர் தொடர்ந்து இசையிரும் ஆர்வம் காட்டி வருகிறார்.

பள்ளி கல்விக்கு மேல் படிப்பில் ஆர்வம் காட்டாமல் இசைத் துறையில் ஆர்வம் காட்டினார். பதினோராம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போதே பள்ளி கல்வியை இடையில் நிறுத்தி விட்டு வெளியே வந்தவர். அடல்ட் கண்டன்ட் படங்களில் அதிகமாக நடித்து இளம் வயது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அதே படங்கள் மிகுந்த சர்ச்சைகளை கிளம்பி விடுவதும் உண்டு. பகலில் நடிப்பு இரவு நேரத்தில் இசை அமைப்பு என்று கடுமையாக உழைத்து முன்னேறியவர் ஜிவி பிரகாஷ். எழுபத்தைந்து படங்களுக்கு மேலாக இசை அமைத்துள்ளார். முக்கியமாக இயக்குநர்கள் படங்களில் நடிப்பது மற்றும் இசையமைப்பும் செய்து வருகிறார்.

பள்ளி கல்வி படிக்கும் போதே அறிமுகம் ஆன பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். நன்றாக போன் திருமண பந்தத்தில் சமீபத்தில் முறிவு ஏற்பட்டது தான் வருத்தம்.

தேசிய விருது

சூரரைப்போற்று திரைப்படம் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இருமுறை பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்  பாடல் வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த பாடல் அவர் கைகளில் விருதுகளை தவழ வைத்தது. அவர் மேலும் பல விருதுகளை பெற வேண்டும் என்று அவரது பிறந்த நாளில் வாழ்த்துவோம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.வி.பிரகாஷ் குமார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.