HBD Gautham Menon : மனதை வருடும் ரொமான்ஸ்; ஆங்கில வசனங்கள் என தமிழ் சினிமாவில் தனிபாணி கொண்ட GVM பிறந்த தினம் இன்று!
HBD Gautham Menon : மனதை வருடும் ரொமான்ஸ்; ஆங்கில வசனங்கள் என தமிழ் சினிமாவில் தனிபாணி கொண்ட GVM பிறந்த தினம் இன்று!
கௌதம் வாசுதேவ் மேனன் என்ற கௌதம் மேனன், இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுதுபவர் தயாரிப்பாளர் என்று சினிமாவில் பல முகங்களைக் கொண்டவர், தமிழ் சினிமாவோடு அதிக தொடர்பு உள்ளவர் என்றாலும், தெலுங்கு, இந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.
இவரது படங்களில் ரொமான்டிக், காதல் சிறப்பாக இருக்கும். இவர் இயக்கிய ரொமான்டிக் படங்களை இன்றும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதில் மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் குறிப்பிடும்படியான படங்கள்.
அவற்றையெல்லாம் இன்றும் மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இவரது ஆக்ஷன் திரில்லர் படங்களான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னையறிந்தால், வெந்து தனிந்தது காடு ஆகிய படங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இதில் வாரணம் ஆயிரம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. இவர் தயாரித்த தங்க மீன்கள் என்ற படம், தேசிய விருது பெற்ற படம்.
கௌதம் மேனன், கேரளாவில் உள்ள பாலக்காடு, ஊட்டபல்லத்தில் பிறந்தவர். அங்கே பிறந்திருந்தாலும் அவர் வளர்ந்தது முழுவதும் சென்னை அண்ணா நகரில், அவர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், புதுக்கோட்டை மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும் படித்துள்ளார்.
இயக்குனர் ராஜிவ் மேனனிடம் மின்சார கனவு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் 2000மாவது ஆண்டு துவங்கி ஓ லலா படம்தான் 2001ம் ஆண்டில் மின்னலே என்ற பெயரில் வெளியானது. இதில் நடிகர் மாதவன் கதாநாயகனான நடித்துள்ளார். ரீமா சென் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட். இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா, ஜோதிகா நடித்த காக்க காக்க படமும் ஹிட்டானது. இந்தப்படத்தில் தான் சூர்யாவும், ஜோதிகாவும் காதலிக்க துவங்கினார்கள். கௌதம் மேனன் படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் எந்தளவுக்கு என்றால், அந்தப்படத்தில் நடித்தவர்களே வாழ்க்கையிலும் உண்மையான காதலர்களாகும் அளவிற்கு ரொமான்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவரது படங்களில் கூடுதலாக ஆங்கில வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
அது அவரது படங்களை மேலும் ஸ்டைலிஷாக மாற்றும். விண்ணைத்தாண்டி வருவாயா, ஜெஸ்ஸியை ரசிகர்கள் இன்னமும் கொண்டாடுவதற்கு காரணம் அந்தப்படத்தில் ரொமான்டிக், ஸ்டைல் இரண்டும் அதிகமாக இருப்பதுதான். அதனால் இவரது படங்கள் அமெரிக்க பாணியில் இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
மேலும் இவரது படங்களில் பெண் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். பெண்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதாகவும் இருக்கும். இவரது படங்களில் திரைக்கதையும், எடிட்டிங்கும் ஒரு டிராவல் செய்வது போலவே இருக்கும்.
நடிகர்கள் கமலஹாசன், அஜித், சூர்யா, ஜீவா என முன்னணி நடிகர்களுடனும் இணைந்து கௌதம் மேனன் பணியாற்றியுள்ளார். அவர் எப்போதும் காதலை கொண்டாடும் ஒரு மனிதராகவும் இருந்துள்ளார். இதனால்தான் அவரது காதல் படங்கள் அனைத்தும் அவருக்கு ஹிட் கொடுத்துள்ளன. சில படங்களில் நடிக்கவும் செய்துள்ள இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதையை மையமாக்கக்கொண்டு எடுக்கப்பட்ட சீரிசிலும் நடித்துள்ளார்.
இவருக்கு பிரீத்தி என்ற மனைவியும், ஆர்யா, துருவ் மற்றும் அதியா என்ற மகன்களும் உள்ளனர். இவரது என்னையறிந்தால் படத்தில் காஸ்டியூம் டிசைனராக இருந்த உத்ரா மேனன் இவரது தங்கையாவார். கௌதம் வாசுதேவ் மேனன் வாழ்வில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ்வதற்கு ஹெச்டி தமிழ் வாழ்த்துகிறது.
டாபிக்ஸ்