HBD Dr. Shantha : புற்றுநோயியல் துறையில் புரட்சி! மலிவான மருத்துவத்துக்கு அடித்தளம் அமைத்த டாக்டர் சாந்தா பிறந்த தினம்!
HBD Dr. Shantha : புற்றுநோய் சிகிச்சையில் இவரது சீரிய பணிகளை பாராட்டி இந்திய அரசு மகசேசே, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது. 1955ம் ஆண்டு முதல் அவர் அடையாறு கேன்சர் மையத்துடன் தொடர்பில் இருந்தார். அம்மையத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.
இந்தியாவிலே புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணர் மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவராக இருந்தவர். இவர் அடையார் புற்றுநோய் மையத்தில் அனைத்து மக்களும் சிகிச்சைபெறும் வகையில் தரமான மற்றும் மலிவான விலையில் புற்றுநோய் சிகிச்சைகளை செயல்படுத்தினார்.
இவர் புற்றுநோயை தடுப்பது மற்றும் அதை குணப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது, புற்றுநோய் ஆராய்ச்சியை மேம்படுத்துவது, புற்றுநோய் நிபுணர்களை அதிகரிப்பது, புற்றுநோயாளிகளுக்கு தரமான சிகிச்சையளிப்பது என புற்றுநோய் சிகிச்சைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.
புற்றுநோய் சிகிச்சையில் இவரது சீரிய பணிகளை பாராட்டி இந்திய அரசு மகசேசே, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது. 1955ம் ஆண்டு முதல் அவர் அடையாறு கேன்சர் மையத்துடன் தொடர்பில் இருந்தார். அம்மையத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையின், தேசம் மற்றும் சர்வதேச குழு உறுப்பினர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
1927ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி சென்னை மயிலாப்பூரில் சாந்தா பிறந்தார். இவரது மூதாதையர்கள் சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகிய இருவரும் நோபல் பரிசு பெற்றவர்கள். தற்போதைய தேசிய பெண்கள் பள்ளி, இப்போதைய லேடி சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மாநிலக்கல்லூரியில் மருத்துவத்துக்கு முந்தைய படிப்பையும், மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பையும் முடித்தார்.
1954ல் டாக்டர் முத்துலட்சமி ரெட்டி அடையார் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார். அப்போது சாந்தா தனது எம்டி படிப்பை முடித்திருந்தார். அவர் அரசு தேர்வெழுதி தேர்ச்சி பெற்று முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவதனையில் பணியமர்த்தப்பட்டார். அந்த காலத்தில் இந்தியாவில் பெண் மருத்துவர்கள் என்றாலே அவர்கள் கர்ப்பப்பை மற்றும் மகப்பேறு துறைகளில்தான் நிபுணத்துவம் பெறுவதற்கு நினைப்பார்கள். ஆனால் சாந்தா புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்தது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சிறிய மருத்துவமனையாக துவங்கப்பட்ட அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து தன் வாழ்நாளின் இறுதி வரையில் அங்கே தங்கியிருந்தார். அதன் இன்றைய வளர்ச்சியின் ஒவ்வொரு படியும் டாக்டர் சாந்தாவின் பெயர் சொல்லும். மருத்துவ துறையில் 60 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து சாதனை செய்துள்ளார்.
புற்றுநோய் மையத்தின் ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர். நோயாளிகளின் நலன் மட்டுமின்றி, புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் அறிவியலாளர்களை உருவாக்குவது, நோய் கண்டறியும் வசதி என அனைத்தையும் முன்னேற்றினார்.
அவர் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதில் வல்லவர் மட்டுமின்றி, அந்த நோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியும், மக்களுன்னு புற்றுநோய் மீதுள்ள அச்சத்தையும் போக்கினார். 2021ம் ஆண்டு தனது 93 வயதில் மாரடைப்பால் இறந்தார். மருத்துவ செலவுகள் அதிகரித்து, மருத்துவம் வணிக மயமான காலத்தில் கூட தரமான மற்றும் மலிவான மருத்துவத்தை மக்களுக்கு வழங்கினார்.
ஆண்டுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்துசெல்லும் மருத்துவமனையாக தமிழகத்தில் புற்றுநோய்க்கான சிறந்த மருத்துவமனையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனை இருப்பதற்கு இவரது அயராத உழைப்புதான் காரணம். இந்த மகளிர் மாத்திலும், அவரது பிறந்த நாளிலும் அவரை நினைவு கூர்வதுடன், நாட்டில் பல சாந்தாக்கள் உருவாவதற்கு வழிகாட்டியான அவரை ஹெச்டி தமிழ் போற்றுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குக ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்