HBD Charlie Chaplin : சத்தம் இல்லாமல் சாதனை படைத்த சரித்திர நாயகன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று!
HBD Charlie Chaplin : ஊனா ஓ நீல் என்ற பெண்ணுடனான இறுதி திருமணத்தின் மூலம் அவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர். லிட்டா கிரே என்ற பெண்ணை மணந்ததன் மூலம் ஒரு மகனையும் பெற்றார்.

சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின், இங்கிலாந்தின் லண்டனில் 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார். இவரது தாய் மற்றும் தந்தை இருவருமே நடிகர்கள். இவரது தாயின் மேடை பெயர் லில்லி ஹார்லி, இவர் நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியும் ஆவார். இவரது தனது துறையில் மிகவும் பிரபலமாக இருந்தார்.
இவரது தந்தை இறந்துவிடவே சாப்ளின் தனது 10 வயதுக்குள்ளாகவே தானாகவே தன்னை கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு வந்தார். அவரது தாயும் உடல் நலன் பாதிக்கப்பட்டதால், சார்லியும் அவரது அண்ணன் சிட்னியும் தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அமெரிக்க ரசிகர்களுக்கு இவரை உடனடியாகவே பிடித்துவிட்டது. இசை அரங்கில் ஒரு இரவு என்ற படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. பின்னர் அவர் மேக் செனெட் அண்ட் தி கீ ஸ்டோன் நிறுவனத்துக்காக பணிபுரிந்தார். அவரது துவக்க சம்பளம் வாரத்துக்கு 150 டாலர். ஆனால் இவருக்கு கிடைத்த வரவேற்பு இவரது சம்பளத்தை மடமடவென ஏற்றியது.
இங்கு ஒப்பந்தம் முடிந்தவுடன் அவர் எசானே நிறுவனத்துக்குச் சென்றார். பின்ன கீ ஸ்டோனில் இங்கிலாந்தில் இருந்து வந்து சிட்னி, சார்லியின் இடத்தில் சேர்ந்துகொண்டார். இவர் தொடர்ந்து தனது தொழிலில் முன்னேறி வந்தார். தி ஃபூல் வாக்கர், தி ஃபயர்மேன், தி வாகாபாண்ட், 1 ஏ.எம். ஆகிய படங்களில் முழு காமெடியிலும் இவரே தோன்றினார். தொடர்ந்து பல படங்களில் கலக்கினார்.
மியூச்சுவல் நிறுவனத்தின் ஒப்பந்தம் 1917ம் ஆண்டு முடிந்தது அது முதல் தனியாக தயாரிப்பாளர் ஆனார். தனக்கென சொந்தமாக ஸ்டுடியோலையும் கட்டினார். இது லா பிரே அவென்யூவில் ஹாலிவுட்டின் மையப்பகுதியில் அமைந்திருக்கும். ஃபர்ஸ்ட் நேஷனல் எக்ஸிபிட்டர்ஸ் சர்க்யூட்டில் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு நாயின் கதை என்ற படத்தில் நடித்தார். அரசு தி பாண்ட் என்ற படத்திற்கு வாய்ப்பு கொடுத்தது.
ஷோல்டர் ஆர்ம்ஸ் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து தி கிட், ஏ வுமன் ஆஃப் பாரிஸ், தி கோல்ட் ரஷ், தி சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், மார்டன் டைம்ஸ், தி கிரேட் டிக்டேட்டர், மான்ஷ்யூர் வெர்டாக்ஸ், லைம்லைட், எ கிங் இன் நியூ இயர் என்று தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வெற்றிப் படங்களாக குவித்தார்.
1966ம் ஆண்டு அவரது கடைசி படமான எ கவுன்லெஸ் ஃபரம் ஹாங்காங் என்ற படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ்காக தயாத்தார். இந்தப்படத்தில் சாப்ளினின் மகன் மற்றும் 3 மகள்களும் நடித்தனர். ஆனால் இந்தப்படம் தோல்வியடைந்தது.
இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் விளையாட்டு வீரரும் ஆவார். இவர் 4 புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது ஸ்கிரிப்ட்கள் அனைத்தையும் இவரே எழுதிக்கொள்வார்.
தானானவே இசை கற்றுக்கொண்டார். பாடல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தனது படங்களுக்கு நிதி கொடுத்தவர் மற்றும் தயாரித்தவர் மட்டுமல்ல, எழுத்தாளர், நடிகர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஊனா ஓ நீல் என்ற பெண்ணுடனான இறுதி திருமணத்தின் மூலம் அவருக்கு 8 குழந்தைகள் உள்ளனர். லிட்டா கிரே என்ற பெண்ணை மணந்ததன் மூலம் ஒரு மகனையும் பெற்றார்.
தனது படங்களில் சமகால அரசியலை கொண்டுவந்த துணிச்சல் மிக்க கிரியேட்டராக சார்லி சாப்ளின் இருந்தார். கிட்டத்தட்ட 75 ஆண்டு கலை உலகில் இருந்துள்ளார். இவர் சத்தமில்லாமல் சாதனை படைத்த சரித்திர தலைவராக இன்று வரை நினைவு கூறப்படுகிறார். அவரது பிறந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.
