HBD Anurada : அதிரடி சரவெடி, ஆளை மயக்கும் அற்புத அசத்தல் குரலுக்கு சொந்தக்காரர் - அனுராதா ஸ்ரீராம் பிறந்த தினம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Anurada : அதிரடி சரவெடி, ஆளை மயக்கும் அற்புத அசத்தல் குரலுக்கு சொந்தக்காரர் - அனுராதா ஸ்ரீராம் பிறந்த தினம்!

HBD Anurada : அதிரடி சரவெடி, ஆளை மயக்கும் அற்புத அசத்தல் குரலுக்கு சொந்தக்காரர் - அனுராதா ஸ்ரீராம் பிறந்த தினம்!

Priyadarshini R HT Tamil
Published Jul 09, 2023 07:20 AM IST

HBD Anuradha Sriram : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே என யேசு பிறப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காந்த குரலுக்கு சொந்தக்காரர் அனுராதா ஸ்ரீராம் பிறந்த தினம் இன்று!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுராதா ஸ்ரீராம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுராதா ஸ்ரீராம்

அனுராதா ஸ்ரீராம், 1970ம் ஆண்டு ஜீலை 9ம் தேதி பிறந்தவர். இவர் திரை பின்னணி பாடகி மற்றும் குழந்தை நட்சத்திரம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 3,500 பாடல்களுக்கும் மேல் பாடியவர்.

இவரது தாய் ரேணுகா தேவி, அவரும் திரைப்பின்னணி பாடகிதான். இவரது தந்தை மீனாட்சி சுந்தரம் மோகன். இவர் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்தார். இவர் சென்னை குயின் மேரி கல்லூரியில் இசையில் இளங்களை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். அவர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வென்றவர்.

இவருக்கு அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. இவர் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன், சங்கீத கலாநிதி டி.பிருந்தா மற்றும் டி.விஸ்வநாதன் ஆகியோரிடம் சங்கீதம் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவர் மேற்கத்திய இசையும் கற்றவர். வெளிநாடுகளில் நிறைய கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

இவர் தனது 12வது வயது முதலே பாடத்துவங்கிவிட்டார். தமிழ் படம் காளி மூலம் இவர் சினிமாத்துறையில் கால்பதித்தார். இவரது முதல் பாடல் பாம்பே படத்தில் இடம்பெற்ற மலரோடு, மலரிங்கு என்பதாகும். இவரது முதல் தனிப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்திரா படத்தில் இடம்பெற்ற பாடல். இவரை திரையில் அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார்.

இவர் கர்நாடக இசையில் நிபுணத்துவம் பெற்று உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடியுள்ளார். இவர் சினிமா பாடல்கள் மட்டுமல்ல நிறைய பக்திப்பாடல்களும் பாடியுள்ளார்.

இவரது கணவர் ஸ்ரீராம் பரசுராமுடன் சேர்ந்து பல மேடை கச்சேரிகளை செய்துள்ளார். ‘எலலாமே சங்கீதம்’தான் என்ற இவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சி அப்போது நல்ல ஹிட்டானது. இவர் தமிழில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

நலம் நலம் அறிய ஆவல், தில்ருபா, தில்ருபா காதல் நிலவே தில்ருபா, அச்சம், அச்சம் இல்லை ஆகிய பாடல்கள் இவருக்கு அறிமுகமான காலத்தில் இவருக்கு ஹிட் கொடுத்தது. இதனால் இவர் திரையில் இசையில் தொடர்ந்து சிறந்து விளங்கியது. இவர் சின்னத்திரையிலும், நிறைய இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அனுராமா ஸ்ரீராம் தன் வாழ்வில் பல்வேறு நலன்களையும், வளங்களையும் பெறவேண்டும் அவரது பிறந்தநாளில் ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.